24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
Home Remedies For Stains On Teeth
ஆரோக்கியம் குறிப்புகள்

பற்களின் மீது உள்ள மஞ்சள் கறைகள் நீங்க

சிலருக்கு பற்களின் மேல் மஞ்சள் கறை இருக்கும். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றினால் படிப்படியாக நீங்கும்.

அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு உறங்கும் முன் பல் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும். இரவு தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை பற்களில் தேய்த்துவிட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் பற்களின் மேற்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும். வெள்ளை எள்ளு விதையை, நன்றாக பொடி செய்து பற்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். மிக முக்கியமாக உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.-News & image Credit: maalaimalar

Related posts

ஹெல்த் ஸ்பெஷல்.. குழந்தை பருவ உடல் பருமன் சிறுநீர்ப்பை புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்!

nathan

can i dye my hair while breastfeeding – தாய்ப்பால் கொடுக்கும் போது என் தலைமுடிக்கு சாயம் பூச முடியுமா?

nathan

நாம் தினமும் ஒரு பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது கோடைகாலத்தில் நம்மை உற்சாகப்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

nathan

A முதல் எழுத்தாக இருப்பவரின் குணங்கள், மற்றும் எதிர்காலம்..

nathan

குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சியை பற்றி குழம்பவும், கவலைப்படவும் செய்கிறார்கள்.

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரியான அளவிலான நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா?

nathan

முதுகு நலமாயிருக்க 10 வழிகள்”…

nathan

குழந்தைகளுக்கு வரும் அலர்ஜியும்… இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan