29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
fateline 1647679027
ஆரோக்கியம் குறிப்புகள்

கையில இந்த மாதிரி ரேகை இருக்குறவங்க பணக்காரர் ஆகிடுவாங்களாம்… அப்படி என்ன ஸ்பெஷல்?

கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கைரேகையைக் கொண்டு அவரின் எதிர்காலத்தைக் கணிக்க முடியும். நமது கையில் பல வகையான ரேகைகள் மற்றும் மேடுகள் உள்ளன. ஒவ்வொரு ரேகையும் ஒருவரின் வாழ்க்கைப் பற்றி கூறுகின்றன. அந்த வகையில் கைரேகையில் சனி ரேகை மற்றும் சனி மேடுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சனி ரேகை அனைவரது கைகளிலும் இருந்துவிடாது. அப்படியே அந்த சனி ரேகை இருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த ரேகை ஒருவரின் நிதி நிலை, அடையாளம், வெற்றி போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சனி ரேகையை விதி ரேகை என்றும் அழைப்பார்கள். பொதுவாக இந்த ரேகை மணிக்கட்டில் இருந்து தொடங்கி, நடுவிரலின் கீழ் பகுதியான சனி மேட்டை அடையும். சரி, இப்போது இந்த சனி ரேகையைப் பற்றி சற்று விரிவாக காண்போம் வாருங்கள்.

சனி ரேகை

கைகளில் திருமண ரேகை, நிதி ரேகை, வாழ்க்கை ரேகை, இதய ரேகை போன்றவை இருப்பது போல, சனி ரேகையும் இருக்கும். ஆனால் கைரேகை ஜோதிடத்தின் படி, இந்த சனி ரேகை அதிர்ஷ்டசாலிகள் கையில் தான் இருக்கும். இந்த வகை ரேகை மணிக்கட்டில் இருந்து தொடங்கி சனி மேடான நடுவிரலின் கீழ் பகுதி வரை செல்லும். சனி மேடு என்பது நடுவிரலின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது.

இளம் வயதில் பணக்காரராக்கும் சனி ரேகை

எவருடைய கையில் சனி ரேகை மணிக்கட்டின் மேல் பகுதியில் தொடங்கி சனி மேடு வரை செல்கிறதோ, அத்தகையவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் சிறு வயதிலேயே நல்ல வங்கி இருப்புடன் இருப்பார்கள். அதோடு இளம் வயதிலேயே நிறைய பணம் சம்பாதித்து தங்கள் உழைப்பினால் நல்ல பெயர் மற்றும் அங்கீகாரம் பெற்றிருப்பார்கள்.

சனி ரேகை முறியக்கூடாது

கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவருடைய கையில் சனி ரேகை ஆயுள் ரேகையை விட்டு சனி மேட்டிற்கு சென்றால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்டுகிறது. இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி பெறுவார்கள். குறிப்பாக சனி மேடு செல்லும் சனி ரேகையில் முறிவு இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது முழு பலனையும் தராது.

நிறைய பணம் சம்பாதிப்பார்கள்

ஒருவருடைய கையில் குரு மேட்டில் இருந்து சனி மேட்டிற்கு ஒரு ரேகை சென்றால், அத்தகையவர்களும் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். மேலும் இவர்கள் நல்ல வசதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள். முக்கியமாக இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Related posts

உடலில் இப்படி அறிகுறிகளை தென்பட்டால் அலட்சியப்படுத்தாதீர்கள்…!கட்டாயம் இதை படியுங்கள்

nathan

உடல் சூட்டை தணிக்கும் இயற்கை வழிகள்

nathan

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா…?

nathan

கொழுப்பை குறைக்கும் வெந்நீர்

nathan

கர்ப்பமாக இருக்கும் மனைவி கணவரிடம் இருந்து எதிர்பார்க்கும் முக்கிய ஆறுதல் மொழிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

இவளோ பயன் இருக்கா! இதை படிங்க இனி இளநீர் தா குடிப்பிங்க பாருங்க,

nathan

இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

உயிரையுமா பறிக்கும் குளிர்பானம்?

nathan

உணவு சாப்பிட்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவை

nathan