25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
12
ஆரோக்கியம் குறிப்புகள்

உயிரைப் பறிக்குமா உருளைக் கிழங்கு?

முளைவிட்ட உணவுகள் ஊட்டம் நிறைந்தவை என்று கேள்விப்பட்டிருப்போம். அதுவே உருளைக்கிழங்கில் முளைவிட்டிருந்தாலோ, பச்சை நிறத்திட்டுகள் காணப்பட்டாலோ, அவற்றை உபயோகிக்கக்கூடாது என எச்சரிக்கின்றன சில செய்திகள்.

”உருளைக்கிழங்குகளை நீண்டநாள் சேமித்து வைப்பதால் அவற்றில் முளைவிடுகின்றன. நல்ல உருளைக்கிழங்கோடு ஒப்பிடும்போது இவை ருசியாகவோ, ஆரோக்கியமானதாகவோ இருப்பதில்லை. முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் காணப்படும் சாக்கோனைன் (Chaconine) மற்றும் சாலனைன் (Solanine) ஆகியவை நச்சுப் பொருட்களைக் கொண்டுள்ளன.

Solanine நச்சுப்பொருள் சிறிது இருந்தாலும் விஷமாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது. விலங்குகள், பூச்சிகள், பூஞ்சைக்கு எதிரான இயற்கை பூச்சிக்கொல்லிகளாக செயல்படும் இவை தாவரங்களுக்கு நன்மை தருபவை. பூச்சிக் கொல்லிகளாக செயல்படும் இவற்றை மனிதன் உண்ணும்போது எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை.

சாக்கோனைனைவிட, சாலனைன் அதிக நச்சுத்தன்மை உடையது. சிறிதளவு உடலில் கலந்தாலும் தீவிரமான பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியது. குடல் பாதையில் எரிச்சல் உண்டாக்கி பலவகை குடல் நோய்களுக்கு காரணமாகிறது. இதோடு, முளைவிட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவுப்பொருள் (Starch) சர்க்கரையாக மாறிவிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கானது. உருளைக்கிழங்கின் இலை, தண்டு, கனிப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. கிழங்குப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
12

Related posts

இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மாதிரி மென்மையான இதயம் கொண்டவங்களாம்…

nathan

பெண்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்.. சமமாக இருந்தால் தொப்பை அதிகரிக்க ஆரம்பிக்கிறது என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஐயோ குழந்தை அழுதே! என்ன செய்யலாம்?

nathan

இந்த வாஸ்து தவறுகள்- உங்க வீட்டில் இருந்தால் உங்க வாழ்க்கையில் நல்லதே நடக்காதாம் தெரியுமா?

nathan

ப்ளீஸ்… கலர் பாத்து ‘டூத் பேஸ்ட்’ வாங்குங்க …

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்.. பயன்தரும் சமையல் அறை குறிப்புகள் பற்றி பார்ப்போம்….!!

nathan

மஞ்சள் பற்கள் வெள்ளையாக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க…

nathan

குடல்வால் பிரச்சினை மற்றும் குடல் வீக்கத்தை கட்டுப்படுத்த!….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எக்காரணம் கொண்டும் இந்த ராசிக்காரர்களை மட்டும் ரொம்ப நம்பாதீங்க….

nathan