மருத்துவ குறிப்பு

பல் வலியை போக்க நந்தியா வட்டை!

நந்தியா வட்டை முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மூலிகை, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக, கண்நோய் மற்றும் பல்நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நந்தியா வட்டையின் இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்ற அனைத்தும் மருத்துவ பயனுள்ளவை.

இதில், செயல்திறன் மிக்க வேதிப்பொருட்களான, அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் உள்ளன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அமிலம் ஆகியவையும் உள்ளன.

கண் நோய்க்கு சிறந்தது: நந்தியா வட்டையின் இலைகளின் பாலை, காயங்களின் மேல் பூசினால் வீக்கம் குறையும். கண் நோய் நீங்கும். நந்தியா வட்டைப் பூ நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம் ஆகியவற்றை போக்கும். இதில் ஒற்றைப்பூ,
இரட்டைப்பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுத்தால் கண் எரிச்சல் மற்றும் வலி நீங்கி குளிர்ச்சியாகும். நந்தியா வட்டைப்பூவை கசக்கி, கண்களில் இரண்டொரு துளி விட்டு வந்தால், சில தினங்களில் கண்களின் விழித்திரையில் படர்ந்துள்ள பூ மறைந்து போகும்.
மலர்களின் சாற்றை எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், கண் எரிச்சல் குறையும். நந்தியா வட்டை பூக்கள் வாசனையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது. அழியாத மை தயாரிக்க, நிறமூட்டியாகவும் பயன்படுகிறது. நந்தியா வட்டைப்பூ, 50 கிராம், களாப்பூ, 50 கிராம் ஆகியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு, நல்லெண்ணெயில் ஊற வைத்து, 20 நாட்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளிகளை காலை மாலை கண்ணில் விட்டு வந்தால், கண்ணில் படரும் பூ, சதை வளர்ச்சி மற்றும் பலவித கண் நோய்கள் மற்றும் பார்வை குறை நீங்கும். E 1435719966

பல் நோய்க்கு நந்தியா வட்டை வேரை, கஷாயமிட்டுக் குடித்தால் வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். தோல் நோய்கள் குணமாகும். வேர்ப்பட்டையின் கசப்பு தன்மை வயிற்றுப் பூச்சியை கட்டுப்படுத்தும். பல்வலி போக்கும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பினால் பல் வலி நீங்கும்.

நந்தியாவட்டை எளிமையாக கிடைக்கும் மூலிகையாகும். கிராமங்களில் வேலியோரங்களில் வளர்ந்து இருக்கும். வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. ஆயுவேத மருந்து கடைகளிலும் கிடைக்கும். இம்மூலிகையை பயன்படுத்தும் முன், தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button