28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
chest pain
மருத்துவ குறிப்பு

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!தெரிந்துகொள்ளுங்கள் !

தற்போது மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பு தீவிரமான மார்பு வலி மற்றும் அழுத்தம் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும். இது தவிர கை, கழுத்து அல்லது தாடை போன்ற பகுதிகளில் கூர்மையான வலி, திடீரென மூச்சுத் திணறல், வியர்வை மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளும் வெளிப்படும். ஆனால் இவை அனைத்துமே மாரடைப்பின் போது நடப்பவையாகும்.

Warning Signs Of A Heart Attack A Week Before
சில நேரங்களில், அமைதியான மாரடைப்பு (Silent Myocardial Infarction) ஏற்பட்டால், அது எவ்வித அறிகுறிகளையும் வெளிக்காட்டாமல் அமைதியாக தாக்கும். அமைதியான மாரடைப்பின் அறிகுறிகள் மிகவும் லேசாக இருக்கும். விரிவாக கூற வேண்டுமெனில், வழக்கமான அசௌகரியம் அல்லது வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகளால் பலர் இவற்றை புறக்கணிக்கிறார்கள்.

மாரடைப்பு என்பது ஒரு தீவிர மருத்துவ அவசரமாகும். இந்நிலையால் இரத்தம் உறைந்து, இதயத்திற்கு இரத்தம் வழங்கப்படுவது திடீரென தடுக்கப்படுகிறது. துரதிர்ஷ்டமாக, பலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் குறித்த அறியாமையினால், மாரடைப்பினால் பலர் இறக்க நேரிடுகிறது. எனவே கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தளங்களில் கடுமையான கரோனரி நோய்க்குறி சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளின் ஆரோக்கியத்தை கண்காணித்து எடுக்கப்பட்டு தரவுகளில் இருந்து, ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் வெளிப்படும் நான்கு முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளனர். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

அசாதாரண சோர்வு

பல நோயாளிகள் உடல் சோர்வு அல்லது உடல் அசௌகரியத்தை உணரக்கூடும் மற்றும் அதிக வேலை, மோசமான தூக்கம் அல்லது சில வயது தொடர்பான வலி போன்றவற்றை உணரலாம் என்று ஹார்வர்ட் ஆய்வு கூறுகிறது. மாரடைப்பு உள்ள ஒவ்வொரு 3 பேரில் 2 பேருக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் அல்லது மிகுந்த உடல் சோர்வு போன்றவற்றை ஒரு வாரங்களுக்கு முன் உணர்வதாக சிடார்ஸ் சினாய் மருத்துவமனை கூறுகிறது.

தூக்க பிரச்சனை

சிடிசி-யின் படி, தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயுடன் தொடர்புடையது. காலப்போக்கில் மோசமான தூக்கம் ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு வழிவகுத்து, இதயத்தை காயப்படுத்தும். மேலும் தூக்கமின்மை மன அழுத்த அளவை அதிகரிப்பதோடு, உடல் செயல்பாட்டைக் குறைக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளின் மீது நாட்டத்தை அதிகரிக்கும். எனவே மாரடைப்பு வருவதற்கு முன் தூக்கமின்மை பிரச்சனையை சந்தித்தால் கவனமாக இருங்கள். இது இவிர மிகுந்த சப்தத்துடனான குறட்டை விட்டு தூங்கினால், அது இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பதன் மற்றொரு அறிகுறியாகும். பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் இதய செயலிழப்பு போன்ற சில உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு மிகுந்த சப்தத்துடனான குறட்டை ஏற்படலாம்.

கவலை

சில நோயாளிகள் மிகவும் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இது மாரடைப்பு நோயாளிகளிடையே பொதுவாக காணப்படும். ஆனால் சிலருக்கு உடலில் ஏதோ தவறு நிகழப்போகிறது என்ற ஒருவித அழிவின் உணர்வை உணரக்கூடும். எனவே உங்களுக்கு திடீரென்று மனதில் உயிரைப் பற்றிய ஒருவித கவலை திடீரென எழுமாயின், உஷாராகிக் கொள்ளுங்கள்.

கை பலவீனம் அல்லது அசௌகரியம்

மாரடைப்பு ஏற்படவிருக்கும் ஒருவருக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கைகள் பலவீனமாக இருப்பது போல் இருக்கும். அதேப்போல் தொண்டை அல்லது மார்பில் லேசான வலி, இரைப்பை ரிஃப்ளக்ஸ், அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றுடன் குழப்பமடையலாம். இது தவிர, முதுகு, கழுத்து, தாடை, வயிறு போன்ற பகுதிகளிலும் வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்கலாம். ஆனால் இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.

மாரடைப்பு வந்தால் எவ்வாறு நடந்து கொள்வது?

மாரடைப்பு ஏற்பட்டு உங்களால் முடிந்தால், ஆஸ்பிரின் மாத்திரையை உடனே எடுத்து உங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் உள்ள அவசர மருத்துவ சேவைகள் (EMS) ஊழியர்களை அழைக்கவும்.

உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், உங்கள் இதயத்தில் தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக ஆம்புலன்ஸ் வரும் வரை மனதை அமைதியாக வைத்து காத்திருக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் மாரடைப்பு வந்த ஒருவருக்கு அருகில் இருந்து, அந்த நபர் மயக்கமுற்று, சுவாசிக்காமல், இதய துடிப்பு இல்லாமல் இருந்தால், உடனே சிபிஆரைத் தொடங்குங்கள். இது தவிர, அவசர மருத்துவ உதவிக்கு உடனே அழைப்பு விடுங்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… மூக்கு ஒழுகாமல் தடுப்பது எப்படி? செலவில்லாமல் எப்படி விரட்டலாம்?

nathan

ஒரே மாதத்தில் இருதய அடைப்பு காணாமல் போக.. வெறும் வயிற்றில் இத குடிங்க.!

nathan

இந்தியர்கள் துளசி செடியை சுற்றி வருவதற்கான அறிவியல் காரணங்கள் என்னவென்று தெரியுமா?

nathan

பரிட்சையில் தோல்வியடையும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

ஒரே வாரத்தில் தொப்பை காணாம போக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஒமிக்ரானின் தீவிரம் பயன்படுத்தும் துணி மாஸ்க் பாதுகாப்பானதா?

nathan

மகளிர் தினம் தோன்றிய வரலாறு

nathan

கால் வலி அதிகமா இருக்கா? அதிலிருந்து விடுபட இயற்கை வைத்தியங்கள்!

nathan

எச்சரிக்கை முக்கியம்!!செல்ல பிராணிகளிடம் இருந்து இந்த வியாதிகள் எல்லாம் பரவுகிறதா,

nathan