கணவன், மனைவி உறவு என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான உறவு. சிலவற்றை உங்கள் வாழ்க்கைக்குள் எடுத்துச்செல்லாத வரை அந்த உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பெரும்பாலும் திருமண உறவு என்பது சிக்கல் நிறைந்ததாகவே, நமக்கு கூறப்படுகிறது மற்றும் திரைப்படங்களில் காட்டப்படுகிறது. வாழ்க்கையில் சிக்கல் மற்றும் பிரச்சனை இல்லாத மனிதர்களே இல்லை. எல்லவற்றையும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டால், நிம்மதியாக இருக்க முடியாது. கணவன் மனைவி உறவில் முதலில் விட்டுக்கொடுத்தல் மற்றும் புரிந்துகொள்ளுதல் பண்புகள் இருக்க வேண்டும். இவை இருந்தால், நீண்ட காலம் நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.
என்ன தான் கணவன், மனைவியாக இருந்தாலும், அவர்களிடம் மறைக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவர்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பங்குதாரர்களாக இருக்கலாம் ஆனால் பல காரணங்களுக்காக அவர்களுடன் விவாதிக்கக் கூடாத சில தலைப்புகள் உள்ளன. நீங்கள் மிகவும் பாதுகாப்பான நபராக இருக்கும் வரை இக்கட்டுரையில் சொல்லப்படும் உரையாடல்களைத் தவிர்க்கவும். அதை தவிர்க்கும்போது, உங்கள் உறவில் ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கணவர் குடும்பத்தின் மீதுள்ள வெறுப்பு
உங்கள் கணவர் உங்கள் குடும்பத்தை பற்றி விமர்சித்தால் நீங்கள் அதை விரும்புகிறீர்களா? நிச்சயமாக இல்லை என்றே பதில் வரும். அதைப்போல தான் அவருக்கும். அவருடைய குடும்பத்தை பற்றி விமர்சித்தால், அவருக்கு கோபம் வரும். உங்கள் உறவுகளை தீர்மானிக்கும் இடத்தில் நீங்கள் இல்லை. உங்கள் கணவர் குடும்பத்திலுள்ள சிலர் எரிச்சலூட்டுவது போல் உங்களுக்குத் தெரிந்தாலும், நடந்துகொண்டாலும் உங்கள் கணவரிடம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொண்டால், அதை அவருக்குத் தெரியப்படுத்துவதுதான் நல்லது. அதை விட்டு, உங்களுக்கு பிடிக்கவில்லை என்று அவரை விமர்சிக்கவோ அல்லது குடும்பத்தை விமர்ச்சிக்கவோ வேண்டாம். ஏனெனில், இந்த எல்லைகள் உறவில் மிகவும் முக்கியமானவை.
கடந்தகால பாலியல் வாழ்க்கை
உங்கள் முன்னாள் காதலனைப் பற்றிய உரையாடலைத் தவிர்ப்பது போலவே, உங்கள் கடந்தகால பாலியல் வாழ்க்கையைப் பற்றி அவரிடம் கூறுவதைத் தவிர்க்கவும். அது, உங்கள் கணவர் உங்களுக்கு கொடுக்கக்கூடிய இன்பத்தை விட சிறப்பாக இருந்தாலும் கூட, அதை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் உறவுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தலாம். அவர்கள் உங்கள் முன்னாள் காதலனுடன் தங்களை ஒப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால், பாதுகாப்பின்மை மற்றும் சந்தேகம் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
குறைபாடுகள்
உறவில் நேர்மையாக இருங்கள். ஆனால், அவருடைய குறைபாடுகள் என்று வரும்போது ஆறு போல் வேகமாக ஓடாதீர்கள். அவரை எப்போதும் விமர்சிக்காதீர்கள். அவர் நடந்துகொள்ளும் விதம் அல்லது ஏதோ உங்களைத் தொந்தரவு செய்கிறது என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். ஆனால் அதை தொடர்ந்து சுட்டிக்காட்ட வேண்டாம். இது உங்கள் மீது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம்.
பணப் பிரச்சினைகள்
உறவுகளுக்கு இடையில் முக்கிய பிரச்சனையாக இருப்பது நிதிநிலை பிரச்சனை. நிதி பற்றி விவாதிக்கவும், கூட்டு வரவு செலவுத் திட்டங்களை உருவாக்கவும் வேண்டும். ஆனால், உங்கள் இருவருக்கும் இடையே பணத்தை ஒரு பிரச்சனையாக மாற்றாதீர்கள். பணம் என்று வரும்போது பலர் தங்களைத் தற்காத்துக் கொள்ள வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு பணத்தில் மன உளைச்சல்கள் இருக்கும். குறிப்பாக அவர்கள் வளரும்போது வறுமையைப் பார்த்திருந்தால் பணம் அவர்களுக்கு முக்கியமாக தோன்றலாம். பெற்றோர்கள் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை விட பணத்தால் அவர்களின் மகிழ்ச்சியை வாங்க முயற்சித்தால் பணக்காரர்களுக்கு கூட பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் சில நேரங்களில் உங்களால் புரிந்துகொள்ள முடியாத நினைவுகளைத் தூண்டும். எனவே பணத்தைப் பற்றி மட்டும் பேசாமல், உரையாடலின் திசையை உணர முயற்சிக்கவும். தலைப்பை வேண்டுமானால் மாற்றவும்.
எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்?
ஒவ்வொருவரின் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் அவர்களின் உறவை தீர்மானிக்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது. உங்களால் சில மனப்பான்மையை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் செய்யக்கூடியது உங்கள் கூட்டாளரை அந்த தீர்ப்பிலிருந்து காப்பாற்றுவதுதான். எப்படி? மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவரிடம் சொல்வதை நிறுத்துங்கள். அவர்கள் கேட்டால், அது வேறுவிதமாக இருந்தாலும் அதை நேர்மறையாகச் சொல்லுங்கள். நீங்கள் விவரங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. மேலும், உங்களால் அனைவரையும் மகிழ்விக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் மக்கள் உங்கள் உறவை எதிர்மறையாக மதிப்பிட்டாலும் பரவாயில்லை.