25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mochai poriyal
சமையல் குறிப்புகள்

சுவையான மொச்சை பொரியல்

பலருக்கு மொச்சை மிகவும் விருப்பமான உணவுப் பொருள். அதிலும் அதனை குழம்பு செய்தால், ரசம் போன்று விட்டு நன்கு சாப்பிடுவார்கள். அத்தகைய மொச்சையை பொரியல் செய்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும் என்பது தெரியுமா?

தமிழ்நாட்டு பாரம்பரிய தின்பண்டங்களை சுவைக்க ஆசையா? அப்ப உடனே இத படிங்க…

ஆம், இங்கு மொச்சை பொரியலை எப்படி சுவையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

Mochai Poriyal Recipe
தேவையான பொருட்கள்:

மொச்சை – 1 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 2 பற்கள்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு தூவி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள் மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.

அடுத்து, அதில் வேக வைத்துள்ள மொச்சையை சேர்த்து மசாலாவானது மொச்சையில் ஒன்று சேர நன்கு பிரட்டி இறக்கினால், மொச்சை பொரியல் ரெடி!!!

Related posts

தக்காளி குழம்பு

nathan

பூரி மசாலா

nathan

படியுங்க எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?

nathan

சூப்பரான மொறு மொறு தோசை

nathan

சுவையான அரிசி மாவு தேங்காய் ரொட்டி

nathan

ருசியான பிரட் உப்புமா

nathan

சூப்பரான மலாய் கார்ன் பாலக்

nathan

ரேஷன் அரிசியில் மொறு மொறுப்பான தோசை

nathan

சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்

nathan