35.2 C
Chennai
Friday, May 16, 2025
copy of 6
சரும பராமரிப்பு

பெண்களின் அழகைப் பாதுகாக்கும் கிருணிப்பழம்

கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சித்தரும் பானமாக நாம் அருந்தும் கிருணிப்பழம். பெண்களின் அழகை பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது என்றால் ஆச்சர்யம் தானே. கிருணிப்பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது.

தோலில் உள்ள எண்ணெய்ப் பசை குறைந்து சருமம் வறண்டு காட்சியளிப்பவர்கள் கிருணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தடவினால் தோல் மிருதுவாகும்.

கிருணிப்பழ விதையைக் காய வைத்த பவுடர் 100 கிராம்,ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் கலந்து பசையாக்கி. கேசம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளித்தால், எண்ணெய் தேய்த்துக் குளித்தது போன்று குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும். (ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தை தந்து தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிருணி விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்).

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லாக இருக்கும், அவர்கள் கிருணிப்பழத்துண்டு ஒன்றை எடுத்து மசித்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
நூறு கிராம் கிருணி விதையுடன் பயத்தம் பருப்பு, சீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து குளித்து வர, தலைமுடி சுத்தமாவதோடு பளபளப்பும் கூடும்.

இரண்டு தேக்கரண்டி வெள்ளரி ஜூஸýடன், இரண்டு தேக்கரண்டி கிருணிப்பழ விழுதைச் சேர்த்து 4 (அ) 5 துளி எலுமிச்சைச் சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்றாகக் குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு எங்காவது வெளியில் போகும் போது இதை இயற்கை சென்ட் ஆகப் பயன்படுத்தலாம். 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாது. தோலையும் சேதப்படுத்தாது. விருப்பப்பட்டால் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சிலருக்கு கை, கால், முகத்தில் தேவையில்லாத முடிகள் முளைக்கும், இதற்கு கிருணிப்பழ விதை பவுடர், ஓட்ஸ் பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், ஆவாரம்பூ பவுடர் தலா 100 கிராம் எடுத்து விழுதாக அரைத்துத் தேய்த்துக் குளித்து வர முகத்தில் உள்ள முடியை வலுவிழக்கச் செய்து தோலை மிருதுவாக்கும். ஆவாரம் பூ சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

வயோதிகத்தின் அறிகுறி கண்களில் தான் முதலில் தெரியும். இதற்கு பால் பவுடர், கிருணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.
கடுகு எண்ணெய்யுடன், கிருணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசினால் பஞ்சு போல் மிருதுவாகும்.
copy of 6

Related posts

beauty tips in tamil ,டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்!

nathan

முதுமைப் புள்ளிகள்?

nathan

வசிகரத்தை அள்ளித் தரவல்ல ஆரஞ்ச் பழங்களின் அழகு டிப்ஸ்

nathan

பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்..

nathan

உங்க ஸ்கின் ரொம்ப சென்சிட்டிவா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்!!

nathan

சருமத்திற்கு அழகு சேர்க்கும் எலுமிச்சை

nathan

உப்பைக் கொண்டு கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan

உடல் நாற்றத்தை போக்க எளிய வீட்டு வைத்தியம்

nathan