36 C
Chennai
Saturday, Jul 12, 2025
fruitsfordiabetes 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

இன்று உலகில் சர்க்கரை நோய் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாக மாறிவிட்டது. உலகளவில் சர்க்கரை நோயால் சுமார் 425 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் என்னும் நிலையானது இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்க நிலையாகும். முந்தைய ஆய்வுகளில் சர்க்கரை நோய் சிறுநீரக சிக்கல்கள், உடல் பருமன், இதய நோய் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இப்பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை நிறைந்த உணவுகளை அறவே தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகளால் பழங்களை கூட ரசித்து சாப்பிட முடியவில்லை. ஏனெனில் பல பழங்களில் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் சில பழங்களில் இந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடலாம். இப்போது சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ப கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் சர்க்கரை குறைவாக இருக்கும் சில பழங்களைக் காண்போம்.

ஆரஞ்சு

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. ஒரு மிதமான அளவிலான ஆரங்சு பழத்தில் 12 கிராம் சர்க்கரை மற்றும் 70 கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும் இதில் பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் உள்ளதால், இது இரத்த அழுத்த அளவை சீராக்க உதவுகிறது.

கிரேப்ஃபுருட்

மற்றொரு சிட்ரஸ் பழம் தான் கிரேப்ஃபுரூட். ஒரு மிதமான அளவிலான கிரேப்ஃபுரூட்டில் 9 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. எனவே இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். ஆனால் எந்த பழத்தையும் அளவாக சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

ராஸ்ப்பெர்ரி

பெர்ரி பழங்களில் ஒன்றான ராஸ்ப்பெர்ரி பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது மற்றும் இது சர்க்கரையின் மீதான ஆவலைத் தணிக்கும் அற்புதமான பழம். ஒரு கப் ராஸ்ப்பெர்ரி பழத்தில் 5 கிராம் சர்க்கரையுடன், நார்ச்சத்தும் உள்ளது. ஆகவே இந்த பெர்ரி பழத்தை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்காது.

கிவி

யாருக்கு தான் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை பிடிக்காது. இத்தகைய புளிப்பும், இனிப்பும் கலந்தது தான் கிவி பழத்தின் சுவை. இந்த பச்சை நிற பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இதில் சர்க்கரையின் அளவும் குறைவு. அதுவும் ஒரு கிவி பழத்தில் 6 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது.

அவகேடோ

அவகேடோ பழத்தில் சர்க்கரை மிகவும் குறைவு. ஒரு அவகேடோ பழத்தில் 1 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. ஆகவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான பழம். அதோடு இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதயத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

பீச்

பீச் பழம் என்ன தான் இனிப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும், இதில் சர்க்கரை குறைவான அளவிலேயே உள்ளது. ஒருமிதமான அளவிலான பீச் பழத்தில் 13 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இனிப்பின் மீதான ஆவலை இப்பழத்தை சாப்பிட்டு தீர்த்துக் கொள்ளலாம்.

ப்ளம்ஸ்

சுவையான ஊதா நிற ப்ளம்ஸ் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஒரு ப்ளம்ஸ் பழத்தில் 7 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. ஆகவே இந்த பழத்தையும் சர்க்கரை நோயாளில் அச்சமின்றி வாங்கி சாப்பிடலாம்.

ஆப்பிள்

ஆப்பிள் ஜூஸ் முழுமையாக சர்க்கரை நிறைந்தது. ஆனால் ஆப்பிளை அப்படியே கடித்து சாப்பிட்டால், அதில் இருந்து 19 கிராம் சர்க்கரை மட்டுமே கிடைக்கும். மேலும் தினமும் ஒரு ஆப்பிளை கடித்து சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

தர்பூசணி

கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் நிறைந்தது மட்டுமின்றி, ஒரு கப் தர்பூசணியில் 10 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. அதோடு இப்பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு இரும்புச்சத்தும் கிடைக்கும் ஆகவே சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை சாப்பிட யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அளவாக சாப்பிடுங்கள்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் டயட்டரி நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளிடையே காணப்படும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் மற்றும் இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும். கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது அஜீரண கோளாறு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணிகள் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

குடைமிளகாய் மருத்துவ பலன்கள்

nathan

வாழைத்தண்டு.வாழைப்பூ: மருத்துவ நன்மைகள் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

தலைவலி உங்களை வாட்டி வதைக்குதா? இதோ சில எளிய வைத்தியங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா நினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….!

nathan

சூப்பர் டிப்ஸ்! சிறுநீரக கல் அடைப்பு பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து..!

nathan

கால்சியம் உடலுக்கு ரொம்ப அவசியம்!தெரிந்துகொள்வோமா?

nathan

குழந்தை ஆணா பெண்ணா..?!

nathan