மருத்துவ குறிப்பு

எச்சரிக்கை முக்கியம்!!செல்ல பிராணிகளிடம் இருந்து இந்த வியாதிகள் எல்லாம் பரவுகிறதா,

செல்ல பிராணிகள் வளர்ப்பதினால் மன அழுத்தம் குறைகிறது, மற்றும் உங்கள் மனதை இலகுவாக வைத்துக் கொள்ளவும் மகிழ்ச்சியாக இருக்கவும் செல்ல பிராணிகள் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, செல்ல பிராணிகள் வளர்ப்பது நல்லது என்று கூறுவார்கள்.

ஆம், இது உண்மை தான். ஆனால் சிலர் செல்ல பிராணிகளுடன் எல்லை மீறி, கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, அதனுடனே ஒட்டிக் கொண்டு திரிவது என சகல நேரமும் செல்ல பிராணிகள் உடனே இருப்பார்கள்.

இதனால் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா, ஒன்றல்ல இரண்டல்ல சொறியில் இருந்து காசநோய் வரை பல விதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு செல்ல பிராணிகள் காரணமாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்…..

படர்தாமரை

இளம் வயது பிராணிகளிடம் இருந்து தான் படர்தாமரை அதிகமாக பரவுகிறதாம். முக்கியமாக பூனை, மற்றும் நாய்களிடம் இருந்து. இளம் பிராணிகளுக்கு படர்தாமரை ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியாது. அது தெரியாமல் அதை நாம் தூக்கி கொஞ்சி விளையாடும் போது படர்தாமரை பரவுகிறது. இது பரவாமல் இருக்க, நீங்கள் உங்கள் செல்ல பிராணியுடன் விளையாடிய பிறகு அல்லது தொட்ட பிறகு கை கழுவதல் அவசியம்.

புழுக்கள் தொற்று

நாடாப்புழுக்கள், கொக்கிப்புழுக்கள், உருளைப்புழுக்கள் போன்றவை பிறந்த செல்ல பிராணிகளிடம் இருந்து பரவுகிறது. ஏனெனில், பொதுவாகவே பிறந்த புது குட்டிகள் இவ்வகையான தாக்கங்களுடன் தான் பிறக்கின்றன என்று பிராணிகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்

நாடாப்புழு

நாடாப்புழு ஒட்டுண்ணி வகையில் உங்கள் செல்ல பிராணிகளிடம் இருந்து பரவுகிறது. உங்கள் சருமத்தொடு செல்ல பிராணிகளை ஓட்டி உறவாடும் போது இந்த நாடாப்புழு தொற்று பரவுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கொக்கிப்புழு

கொக்கிப்புழுகளின் தொற்று பெரும்பாலும், பூனை மற்றும் நாய்களிடம் இருந்து தான் பரவுகிறதாம். இது பரவ காரணம் ஒட்டுண்ணிகள் என்று கூறப்படுகிறது. இதுவும் சருமத்தின் வாயுலாக தான் பரவுகிறது. இதற்கு தீர்வு உங்கள் பிராணிகளை நன்கு பாதுகாப்புடனும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது தான்.

பறவைகளிடம் இருந்து பரவும் காய்ச்சல்

பறவைகளிடம் இருந்து ஒரு வகையான காய்ச்சல் (Psittacosis) பரவுகிறதாம். பாக்டீரியா தாக்கம் ஏற்பட்ட பறைவகளிடம் இருந்து தான் இந்த காய்ச்சல் பரவுகிறது. பறைவகளிடம் இந்த தொற்றுக்கான எந்த அறிகுறியும் தெரியாது. இது ஏற்படாமல் இருக்க, பறவைகளை சுத்தம் செய்யும் போது வெறும் கையில் சுத்தம் செய்யாமல், கையுறை அணிந்து பாதுகாப்புடன் செய்ய வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

டாக்ஸோபிளாஸ்மோசிஸ் (Toxoplasmosis)

இந்த நோய் செல்ல பிராணிகளின் கழிவுகளின் மூலமாக பரவும். பூனைகளிடம் இருந்து தான் பெரும்பாலும் பரவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இது மோசமான உடல்நல விளைவுகளை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான தீர்வு, உங்கள் பூனைக்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்க வேண்டும். அதன் கழிவுகள் உங்கள் வீட்டில் ஏற்படாத முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பறவை காசநோய்

பறவைகளிடம் இருந்தும் ஒரு வகையிலான காசநோய் (Avian TB) பரவுகிறதாம். காற்று வழியாக தான் இது பரவுகிறது என்று கூறப்படுகிறது. இது முதலில் உங்கள் நுரையீரலை தான் பாதிப்படைய செய்கிறது. இதற்கு தீர்வு, கைகளை நன்கு கழுவுவது ஆகும்.

வெறி நாய்க்கடி

இது நம்மில் பலரும் அறிந்ததே ஆகும். செல்ல பிராணிகளிடம் இருந்து பரவும் மிகவும் மோசமான நோயாக இது கருதப்படுகிறது. நாய் கடிப்பதனால் மட்டுமின்றி அதன் எச்சில் மூலமாகவும் பரவுகிறதாம். இதற்கான தீர்வு, உங்கள் செல்ல பிராணியை அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது தான்.

லெப்டோஸ்பிரோசிஸ் / மஞ்சள் காமாலை போன்ற (Leptospirosis)

நோய் வாய்ப்பட்ட செல்ல பிராணிகளின் சிறுநீரின் மூலமாக பரவிகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் இது பரவ வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. செல்ல பிராணிகளிடம் இந்த பாக்டீரியாவின் தொற்று வாரங்களில் இருந்து மாதம் வரை நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான தீர்வு, உங்கள் பிராணி எங்காவது சிறுநீர் கழிந்திருந்தால், உடனே சுத்தம் செய்வது தான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button