27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
dry ginger milk
ஆரோக்கிய உணவு

சுக்கு பாலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

சுக்கு பால் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் சுக்கு தட்டிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஓரளவு குளிர்ந்ததும் வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து, இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.

சுக்கு பொடியை பாலில் போட்டு குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் தொண்டை புண் மாயமாய் மறையும். மேலும் சுக்கு தொற்றுநோயைக் குறைப்பதில் மிகச்சிறந்த பொருள்.

உணவு உண்ட பின் வயிறு உப்புசமாக இருந்தால், அதிலிருந்து விடுபட சுக்கு பொடியை பாலில் போட்டு குடிக்கலாம். சுக்கு பாலைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதுவும் சுக்கு பாலில் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அதன் சத்து இன்னும் அதிகரித்து, உடலுக்கு இன்னும் அதிக நன்மைகளை அளிக்கும்.

தொடர்ந்து விக்கலுக்கு சுக்கை தட்டி பாலில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஓரளவு குளிர்ந்ததும் குடிக்க வேண்டும். சுக்கு வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றை எதிர்க்கும் அளவில் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதற்கு தினமும் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிக்க வேண்டும்.

சுக்குவை பாலில் போட்டு குடிப்பதால், அது மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்றவற்றில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கும். இதற்கு தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிக்க வேண்டும்.

Related posts

புதினா சர்பத்

nathan

இந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடா மரணம் நிச்சயம்!

nathan

உடல்வலி நீக்கும் நாவல் பழச்சாறு பற்றி தெரியாத விடயங்கள்!

nathan

கறுப்பு உளுந்து சுண்டல்

nathan

புளிச்சகீரையின் மருத்துவ குணங்கள்

nathan

அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக்கொள்ள உண்ணும் உணவுகளும் முக்கியம்!

sangika

உணவுக்கு பின் வெற்றிலை மெல்லுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

nathan

வெள்ளரிக்காய் நன்மைகள் (Cucumber Benefits in Tamil)

nathan

உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடிய பேரீச்சை !….

sangika