வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு போட்டி மிகவும் அவசியமானது. போட்டி நேர்மையானதாக மற்றும் ஆரோக்கியமானதாக இருக்கும் வரை அது நல்லதுதான். ஆனால் ஜெயிக்க வேண்டும் என்று வெறியில் மூர்கத்தனமாக ஈடுபடும் போது அது ஆபத்தானதாக மாறுகிறது. போட்டி என்று வரும்போது, நாம் அனைவரும் ஆக்ரோஷமாக இருப்பதில்லை. போட்டியை வாழ்க்கை அல்லது சூழ்நிலையின் ஒரு பகுதியாகவே கருதுகிறோம்.
இதற்கு மாறாக சிலர் மிகவும் ஆக்ரோஷமாகவும் போட்டித்தன்மையுடனும் இருக்கிறார்கள், அவர்களுக்கு விதிகளை பற்றி கவலையில்லை மாறாக ஜெயிக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே இருக்கும். அவர்கள் கூறப்பட்ட விதிகளை மீறலாம் அல்லது மோசமாக விளையாடலாம், சூழ்ச்சிகளை பயன்படுத்தலாம். இந்த குணம் சில ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் இப்படி மோசமான போட்டித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
மேஷம்
இவர்கள் மோசமான போட்டி மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் இலட்சிய வெறி கொண்டவர்கள். மேஷ ராசிக்காரர்கள் எதையும் இலகுவாக எடுத்துக்கொள்வதை நம்ப மாட்டார்கள். அவர்கள் செய்வதில் அவர்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும், நீங்கள் அவர்களுக்கு சவால் விடுகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு மோசமான சூழலுக்கு ஆளாக நேரிடும், ஏனென்றால் அவர்கள் உங்களை வெல்ல எதையும் செய்வார்கள். அவர்கள் ஆக்ரோஷமாக போட்டியில் ஈடுபடலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
ரிஷபம்
ஆடம்பரத்தை விரும்பும் இவர்கள் அனைத்திலும் சிறந்ததை பெற விரும்புகிறார்கள். அதை அடைய இவர்கள் எதையும் செய்வார்கள். அவர்கள் மிகவும் ஆக்ரோஷமானவர்களாகவும், தங்கள் வழியில் விஷயங்களைச் செய்ய மிகவும் பிடிவாதமாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனதில் முடிவெடுத்தவுடன் அதனை அடைய கடினமாக உழைக்கிறார்கள், மேலும் அவர்கள் அதை செய்வதில் சிறந்தவர்களாக இருக்க விரும்புகிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை விட உயர்ந்தவர்களாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் சிறந்தவர்களாக இருக்க விரும்புகிறார்கள், அதற்காகவும் கவனத்தைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் எதையாவது சாதித்தால், அதில் எப்போதும் திருப்தி அடையமாட்டார்கள். தோல்வி என்ற வார்த்தை அவர்களின் அகராதியில் இல்லாததால் எல்லாவற்றையும் போட்டியாகவே கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் மோசமாக விளையாடுவார்கள், எனவே அவர்களின் எதிரிகள் தங்கள் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
அவர்கள் அமைதியான மக்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் தவறவிடுவது என்னவென்றால், அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க முடியும். அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையான மற்றும் போட்டித்தன்மை கொண்டவர்கள். அவர்களின் அதிகாரம் மிக்க ஆளுமை, காரியங்களைச் செய்ய அவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் போட்டியை விரும்புகிறார்கள், ஏனென்றால் அவர்கள் உண்மையிலேயே தாங்கள் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க இதனை சிறந்த வாய்ப்பாக கருதுகிறார்கள். அவர்கள் முதலாளியாக இருக்க விரும்புகிறார்கள், தாங்கள் வெற்றி பெறுவதற்கான எளிய வழி போட்டி என்பது அவர்களுக்குத் தெரியும். தாங்கள்தான் சிறந்தவர் என்று சொல்லும்போது தாங்கள் முட்டாள்தனமாக பேசவில்லை என்பதை மக்களுக்கு நிரூபிக்க இது எளிதான வழியாகும். அதனால் போட்டியில் ஜெயிக்க இவர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.