யாருக்குதான் கொண்டைக்கடலை பிடிக்காது. பெரும்பாலும் எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற பயிராக கொண்டைக்கடலை இருக்கிறது. அதிலும் பெண்கள் பொதுவாக இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். சாதாரண நாட்களில் இது ஓகே தான். ஆனால் கர்ப்பமானவுடன் பெண்களுடைய உணவுப் பழக்கமே முற்றிலும் மாறிவிடும். அதிலும் முதல் சில வாரங்களில் சாப்பிடும் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
அதனால் பெண்கள் கர்ப்ப காலத்தில் கொண்டைக்கடலை சாப்பிடலாமா என்ற சந்தேகம் எழும். அதைப பற்றி இங்கு பார்ப்போம்.
கர்ப்ப காலம்
கர்ப்ப காலத்தில் கொண்டைக்கடலை சாப்பிடக்கூடாது என்று சிலர் சொல்வார்கள். அதற்கான முற்றிலும் கொண்டைக்கடலையை ஒதுக்கிவிட வேண்டிய அவசியமில்லை. சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்டைக்கடலையில் இருந்தும் பெற முடியும். அதனால் முதலில் பயத்தை தவிருங்கள். அதற்கு முன்பாக, இதில் உள்ள நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் இரண்டைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்
எவ்வளவு பாதுகாப்பானது?
கர்ப்ப காலத்தில் கொண்டைக்கடலை சாப்பிடுவது பெரிதான ஒன்றும் பிரச்சினை ஏற்படுத்தும் உணவல்ல. நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்றே ஒன்று என்னவென்றால், அதை முறையாக, நன்றாக வுகவைத்துதான் சாப்பிட வேண்டும். மற்றொரு விஷயம், சிலர் கடலை சாப்பிட ஆரம்பித்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். சாப்பிட வேண்டிய அளவை விட பலமடங்கு தாண்டிப்போகும்.அப்படி அடிக்ட் ஆகிவிடக்கூடாது. இது இரண்டையும் முறையாகப் பின்பற்றினால்,? நிச்சயம் கொண்டைக்கடலையில் உள்ள முழுமையான புரோட்டீன், மினரல்கள், .ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைப் பெறலாம்.
நரம்புகளுக்கு
கொண்டைக்கடலையில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நரம்புகளைத் தூண்டி, துரிதப்படுத்தும். ரத்த நாளங்கள் விரிவடையும். அதனால் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கர்ப்பமான முதல் சில வாரங்களில் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால் 4 மாதங்களுக்குப் பிறகு, இதை தவிர்ப்பது நல்லது.
அனீமியா
ரத்த சிவப்பணுக்கள் குறைந்திருத்தல் (ஹீமோகுளோபின்) பற்றாக்குறையால் தான் அனீமியா ஏற்படுகிறது. ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் இரும்புச்சத்துக்கு மிக அதிக பங்கு உண்டு. அதிலும் கர்ப்ப காலத்தில் மிக அதிகமாகவே தேவைப்படும். அதனால் கொண்டைக்கடலையில் உள்ள இரும்புச்சத்தை முற்றிலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 100 கிராம் அளவு கொண்டைக்கடலையில் நம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தில் 22 சதவீதம் கிடைத்துவிடுகிறது.
உடலுக்கு ஆற்றல்
கர்ப்பம் என்பது விளையாட்டு காரியமல்ல. பெண்கள் கர்ப்ப பாலத்தில் மிக எளிதாக உடல் சோர்வு அடைந்து விடுவார்கள். அதனால் வழக்கத்தை விட, அதிக ஆற்றல் உடலுக்குத் தேவைப்படுகிறது. அதனால் கொண்டைக்கடலை சாப்பிடுவதால் உடலுக்குப் போதுமான ஆற்றல் கிடைக்கிறது. அதிலும் கடலையில் உள்ள புரதம், இரும்புச்சத்து, மினரல்கள் ஆகியவற்றால் உடலுக்குப் போதுமான கலோரிகளும் கிடைக்கின்றன. குறிப்பாக, கருப்பு நிற கொண்டைக்கடலையில் தான் உங்களுக்கு மிக அதிகப்படியான ஆற்றல் கிடைக்கிறது.
மூளை வளர்ச்சி
ப்ரக்கோலி மற்றும் காலிஃபிளவரை அடுத்து, கொண்டைக்கடலையில் தான் அதிக அளவில் கோலின் சத்து நிறைந்திருக்கிறது. இதிலுள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் மூளையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும். நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வேகமாகவும் செயல்படத் தூண்டும். தாய்க்கு மட்டுமல்லாது குழந்தையின் மூளை வளர்ச்சியிலும் இது பெரும் பங்கு வகிக்கிறது. அதிக அளவில் கொண்டைக்கடலை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, மூளை மற்றும் தண்டுவடப் பகுதிக்கு வலிமையும் உறுதியும் கிடைக்கிறது.
மக்னீசியம் நிறைந்தது
மற்ற உணவுப் பொருள்களை விட கொண்டைக்கடலையில் அதிக அளவில் மக்னீசியம் நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு அதிகப்படியான ஆற்றலைக் கொடுக்கிறது. அதனால் தான் ஜிம்முக்கு சென்று கடின உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடலுக்கு அதிகப்படியான ஆற்றல் தேவைப்படுவதால், கொண்டைக்கடலை பரிந்துரை செய்யப்படுகிறது.
அதேபோல் தான் கர்ப்பிணப் பெண்களுக்கும். பொதுவாகவே பெண்களுக்கு ஒரு நாளைக்கு 2 மில்லி கிராம் அளவுக்கு மக்னீசியம் தேவைப்படுகிறது. கர்ப்பிணப் பெண்களுக்கு அது 2.4 மில்லி கிராமாக இருக்கும். ஒரு கப் (170 கிராம்) கொண்டைக்கடலையில் மட்டுமே உங்களுக்கு 1.69 மில்லி கிராம் மக்னீசியம் கிடைத்துவிடுகிறது.
பக்க விளைவுகள்
எல்லா உணவுகளிலும் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அதற்கு ஏற்றபடி சில பக்க விளைவுகளும் இருக்கத்தானே செய்யும். அப்படித்தான் கொண்டைக் கடலையிலும் சின்ன சின்ன விளைவுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். கொண்டைக்கடலையும் அதிக அளவில் எடுத்துக் கொண்டால், உடல் பருமன் கட்டுப்பாட்டில் இருக்காது.
சிலருக்கு கர்ப்ப காலத்தில் கொண்டைக்கடலை வயிற்றுப்பகுதியில் அரிப்பை உண்டாக்கும். அதுபோன்று அலர்ஜி இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு கொண்டைக்கடலை அசிடிட்டியை உண்டாக்கும். டயேரியாவையும் ஏற்படுத்தும்.
கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைக் குணப்படுத்தினாலும் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது.
சிறுநீரகக் கல்லை உண்டாக்கும்.