25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
machcham 696x392 1
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க காலில் மச்சம் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

மனிதனின் உடலில் மெலனோசைட் எனப்படும் செல்கள் அதிகமாக சுரந்து ஒன்றாக சேர்வதால் ஏற்படுவதுதான் மச்சம் எனப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் மச்சம் உடம்பில் ஒவ்வொரு இடத்தில் காணப்படுகிறது. இப்படி உடம்பில் மச்சம் இருக்கும் இடத்தை பொறுத்து அவர்களுக்கான அதிர்ஷ்டங்களும் இருக்கிறது என்று முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அப்படி குழந்தை பிறந்த உடனே அவர்களின் உடம்பில் இருக்கும் மச்சத்தைப் பொறுத்து இவன் அதிர்ஷ்டசாலி, இவள் பொறுமையானவள் என்று அவர்களின் குண நலன்களையும் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அவ்வாறு கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு என்னவித குணநலன்களும், எந்தவித அதிர்ஷ்டமும் கிடைக்கிறது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குதிக்காலில் மேற்புரம் அல்லது அடிப் பகுதியில் மச்சம் இருந்தால் இவர்கள் பணம் சம்பாதிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். பணத்தை எப்பொழுதும் இரட்டிப்பாக்குவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் இவர்கள் அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் இவர்களுக்கு செல்வாக்கு மிகுந்த வாழ்க்கை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இவர்கள் எப்பொழுதும் செல்வ வசதியுடன் வாகன வசதியுடன் தான் இருப்பார்கள்.

 

கட்டை விரலின் கீழ்ப் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் எப்பொழுதும் மற்றவர்கள் மீது அன்பாக இருப்பார்கள். அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் தானாக இவர்களைத் தேடி உதவிகள் வரும். வலது பாதத்தில் மச்சம் உள்ளவர்கள் எப்பொழுதும் அமைதியானவர்களாகவும், மற்றவர்கள் மீது அன்புடையவர்களாகவும் இருப்பார்கள்.

எல்லோரையும் எளிதில் நம்ப கூடியவர்களாகவும், தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்பவர்களாகவும், சிறந்த குணத்தை கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு வேலையையும் முயற்சி செய்து வெற்றி காண்பார்கள். வலது பாதத்தின் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் பொறுமை சாலியாகவும், மிகுந்த இறையாண்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

machcham 696x392 1

எந்த ஒரு காரியத்தையும் எளிதில் விட்டு விடாமல் கடைசி வரை முயற்சி செய்து வெற்றி அடைவார்கள். இடது பாதத்தில் மச்சம் உடையவர்கள் எப்பொழுதும் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை எப்பொழுதும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். எதனையும் இவர்களால் எளிமையாக பெற முடியாது. இடது பாதத்தின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளவர்களாகவும், போராட்டம் நிறைந்த வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

 

இடது பாதத்தில் வலதுபுறம் மச்சம் இருந்தால் இவர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்ததாக இருக்கும். ஒரு சிலர் மது பிரியர்களாக இருப்பார்கள். வலது தொடையில் மச்சம் உள்ளவர்கள் இன்பம், துன்பம் இரண்டையும் சமமாகப் பார்ப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மனதை எளிதாக புரிந்து கொண்டு நடப்பார்கள். இவர்களை எவராலும் எளிதாக ஏமாற்ற முடியாது. கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா..? உங்களின் குணாதிசயங்கள் என்ன தெரியுமா?

nathan

இந்த விஷயங்களை எல்லாம் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாது தெரியுமா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

nathan

இந்த 5 ராசிக்காரங்க மாதிரி மோசமான சுயநலவாதியா இருக்க யாராலும் முடியாதாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மகளுக்கு ஒவ்வொரு அம்மாவும் முக்கியமாக சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் ?தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…பூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. ! !

nathan

useful tips.. விரைவில் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த உடற்பயிற்சியை செய்ய

nathan

உங்க கணவன் அல்லது காதலனோட ராசிப்படி உங்கள இப்படி தான் லவ் பண்ணுவாராம்…பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?

nathan