27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
dulquer 164405
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே! எப்பவும் ஸ்மார்ட்டாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கணுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

பெண்களுக்கு மட்டும் தான் தங்கள் அழகைப் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்பதில்லை. ஆண்களுக்கும் இம்மாதிரியான எண்ணம் மற்றும் ஆசை இருக்கும். ஆனால் பல ஆண்கள் இவற்றை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒருவர் நீண்ட காலம் அழகாகவும், இளமையாகவும் காட்சியளிக்க வேண்டுமானால், சருமத்திற்கு போதுமான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும்.

பெண்கள் எப்போதும் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு தினமும் அதற்கென்று நேரத்தை ஒதுக்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருப்பதில்லை. சொல்லப்போனால் பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் சற்று தடிமனாக இருக்கும். எனவே சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால் தான், நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க முடியும். ஆண்களே! நீங்கள் அதிக சிரமப்படாமல், எப்போதும் ஸ்மாட்டாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க நினைத்தால், பின்வரும் சில குறிப்புக்களை நினைவில் கொண்டு, அவற்றைப் பின்பற்றினாலே போதும்.

பெண்கள் எப்படி வெளியே செல்லும் போது, சூரிய ஒளி தங்களின் சருமத்தில் நேரடியாக படாதவாறு சருமத்தை மூடிக் கொள்கிறார்களோ, அதேப் போல் ஆண்களும் வெளியே வெயிலில் செல்லும் போது முகம் மற்றும் சருமத்தை துணியால் மூடிக் கொள்ள வேண்டும். இதனால் சூரிய வெயிலால் சருமம் கருமையாவதைத் தடுக்கலாம்.

டிப்ஸ் #2

தினமும் போதுமான அளவு நீரை ஒருவர் குடித்து வந்தாலே, முகம் பிரகாசமாக இருக்கும். மேலும் நீரில் உள்ள கூறுகள் சருமத்தை இறுக்கமாக்கும் மற்றும் நீரை அதிகம் குடித்தால், அது முதுமைத் தோற்றம் அவ்வளவு எளிதில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காது. எனவே முடிந்த அளவு அதிக நீரைக் குடியுங்கள்.

டிப்ஸ் #3

தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கலாம். அதுவும் யோகா செய்தால் ஒருவர் முதுமையடைவதைத் தடுக்க முடியும். மேலும் உடற்பயிற்சி செய்வதால் உடல் வலுபெறுவதோடு, முகமும் பொலிவடையும். எனவே புத்துணர்ச்சியுடனும், ஸ்மாட்டாகவும் காட்சியளிக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

டிப்ஸ் #4

பொதுவாக சருமத்தில் உள்ள அழுக்கைப் போக்க சோப்பை பயன்படுத்துவோம். ஆனால் அந்த சோப்பை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. முடிந்தவரை கெமிக்கல் குறைவான சோப்பைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். இதனால் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் முற்றிலும் வெளியேற்றப்படுவதைத் தடுக்கலாம்.

டிப்ஸ் #5

முகத்தை எப்போதும் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். அப்படி கழுவும் போது க்ளென்சர் மற்றும் டோனர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள். இதனால் சருமத் துளையின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, முகம் பளிச்சென்று இருக்கும்.

டிப்ஸ் #6

அழகாகவும், இளமையாகவும் காட்சியளிக்க நினைத்தால் குடிப்பழக்கத்தையும், புகைப்பழக்கத்தையும் உடனே கைவிடுங்கள். ஆனால் நீங்கள் மது அருந்துவதாக இருந்தால், அதை குறைவான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்; அதிகமாக புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் வயது மற்றும் அழகு இரண்டையும் குறைக்கும்.

Related posts

திரவ டயட் உண்மையில் எடையை குறைக்க உதவுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

உணவு சாப்பிட்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவை

nathan

இரவு உணவருந்திய பிறகு சிறிது நேரம் நடப்பதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

nathan

அதிகமாக வியர்ப்பது ரொம்ப நல்லது

nathan

குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை மறக்க செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

எச்சரிக்கையாக இருங்க! 12 ராசியில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாம்!

nathan

நயன்தாராவின் கம்பீரமான அழகுக்கு காரணம் இந்த ரகசியங்கள்தானாம்…!

nathan

எப்போதெல்லாம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்?

nathan

உங்க வாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயன்று பாருங்கள்…

nathan