23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pre 15394
ஆரோக்கியம் குறிப்புகள்

கர்ப்பிணி பெண்கள் அறிய வேண்டிய முக்கிய மாத்திரைகள்!தெரிந்துகொள்ளுங்கள் !

கர்ப்ப காலத்தில், பெண்கள் பல வித மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் உள்ளாக நேரிடுகிறது. கர்ப்பிணிகளின் உடற்செயலியல் சார்ந்த மாற்றங்களும், மனம் சார்ந்த மாற்றங்களும் பெண்களை வாழ்வின் உச்ச கட்ட வேதனை, வலி மற்றும் சோதனைகளை அடைய செய்கின்றன.

இந்த மாற்றங்களால், கர்ப்பிணி பெண்கள் அடையும் வேதனைகளை, கர்ப்பிணி பெண்கள் படும் பாடுகளை கட்டுக்குள் வைக்க ஒரு சில மருந்து மாத்திரைகள் உதவுகின்றன. அந்த மாத்திரைகளை பற்றி, இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

தீவிர அறிகுறிகள்..!

பெண்களின் கர்ப்ப காலத்தில் எல்லோரும் அறிந்த அறிகுறிகளாக விளங்கும் வாந்தி, மயக்கம், தலை சுற்றல், பலவீனம் இவற்றோடு, மேலும் சில தீவிர அறிகுறிகளும் ஏற்படுகின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் அந்தத் தீவிர அறிகுறிகளாவன: இரத்த சோகை, மூக்கடைப்பு, மன அழுத்தம், உடல் வறட்சி, பதற்றம், இரத்த வெள்ளை அணுக்களின் எண்னிக்கை குறைவு, குறைந்த பிளாஸ்மா, கண்கள் மற்றும் வாய் வறண்டு போதல்.

அறிகுறிகள் எல்லை மீறினால்..!

இந்த அறிகுறிகள் எல்லையை மீறினால், அது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறி, கர்ப்பிணி பெண்களின் உயிருக்கே அபாயமாக மாறிவிடும்.. இந்த அபாயத்தை ஏற்படுத்தும் அறிகுறிகளை கட்டுக்குள் வைக்க உதவும் மாத்திரைகள் சில உள்ளன. அந்த மாத்திரைகள் “ஆல் 9 மாத்திரைகள்” – “All 9 Tablet” என்று கூறப்படுகின்றன; அந்த ஆல் 9 மாத்திரைகள் பற்றி இப்பொழுது படித்து அறியலாம்..

“All 9 Tablet”

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்த அறிகுறிகளை கட்டுப்படுத்த, மருத்துவர்கள் “All 9 Tablet” என்னும் மாத்திரைகளை பரிந்துரைப்பர். இந்த ஆல் 9 மாத்திரைகள், L-Methyl Folate, Methyl cobalamin and Pyridoxal 5-Phosphate போன்ற உப்புக்களை கொண்டு உள்ளன. இந்த உப்புக்கள் மற்றும் மாத்திரையில் அடங்கியு உள்ள பிற சத்துக்கள், கர்ப்ப கால அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன.

இந்த மாத்திரைகளை கர்ப்பிணிகள் மருத்துவ ஆலோசனையின் படி, தவறாமல் எடுத்துக் கொள்வது அவர்களின் உடலுக்கு நல்லது.

சேய்க்கும் நல்லது!

இந்த ஆல் 9 மாத்திரைகள் தாய்க்கு மட்டும் இன்றி, கருவில் வளரும் சேயின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. கரு, தாயின் வயிற்றில் வளரும் பொழுது, தாய் உட்கொள்ளும் உணவுகளும் மாத்திரைகளும் கருவின் உடலுக்குள் செல்கின்றன. தாயின் உடலில் வளரும் சேயின் தோல், உடல், மூளை வளர்ச்சிகளில் இந்த மாத்திரைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

பக்க விளைவுகள்

மனிதர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித விதமான உடலமைப்பு கொண்டவர்கள். கர்ப்பிணி பெண்களில் சிலருக்கு இந்த மாத்திரைகள் உடலுக்கு ஒத்து கொள்ளலாம்; கர்ப்பிணிகளில் சிலருக்கோ வாந்தி, பேதி, வயிற்று வலி, குடல் சார்ந்த பிரச்சனைகளை கூட இந்த மாத்திரைகள் ஏற்படுத்தலாம்..!

குழந்தையை கூட..!

இந்த ஆல் 9 மாத்திரைகள் கர்ப்பிணிகளின் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத நிலை ஏற்பட்டால் பெண்களின் உடலில் அது ஒரு சில அறிகுறிகளை ஏற்படுத்தும்; அந்த அறிகுறிகளை கண்ட பின், கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த மாத்திரைகள் கர்ப்பிணிகளின் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனில், அது கருவில் வளர்ந்து கொண்டு இருக்கும் குழந்தையை கூட பாதிக்கலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஆகையால், கர்ப்பிணி பெண்களே! இந்த ஆல் 9 மாத்திரைகளை முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு எடுத்துக்கொள்வது தேவையற்ற பக்க விளைவுகளை, ஆபத்தை ஏற்படுத்தும் பாதிப்புகளை தவிர்க்க உதவும்.

மனிதர்கள் எப்பொழுதும், எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது ஏற்பட போகும் சேதங்களை குறைக்க உதவும்..! வருமுன் காப்பது சிறந்தது, என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள் நண்பர்களே..!

Related posts

மண்பானை தண்ணீர் ஏன்? ஜில்லென்று இருப்பது ஏன்?

nathan

உங்களுக்கு எடுப்பான மார்பகங்கள் வேண்டுமா? அப்போ இந்த மசாஜ் செய்து பாருங்க!

nathan

நரம்புத்தளர்ச்சி பிரச்சனை வந்தால்..!!

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறந்த மற்றும் மோசமான தூக்க நிலைகள்

nathan

நல்ல பலன் தரும் தினமும் இந்த மூச்சு பயிற்சியை பண்ணுங்க!! சைனஸ், ஆஸ்துமா, மூக்கடைத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு…

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண் குழந்தைகளிடன் தாய் இதை பற்றி எல்லாம் பேச தயங்க கூடாது!

nathan

சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இத்தனை நன்மைகளா…?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சின்ன சின்ன டிப்ஸ் … டிப்ஸ்… டிப்ஸ்…

nathan

உங்களுக்கு நெஞ்சில் ஏற்படுகிற அசிடிட்டி வலியை தீர்க்க சூப்பர் டிப்ஸ்!

nathan