28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
22 6282567016a24
ஆரோக்கிய உணவு

உடல் சூட்டை தணிக்கும் வெண்பூசணி தயிர் சாதம்

பல விதமான தயிர்சாதத்தை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த கோடைக்காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் சுவையான வெண்பூசணி தயிர் சாதத்தை நீங்கள் சாப்பிடதுண்டா?

தேவையான பொருட்கள்
தயிர் ஒரு கப்

நறுக்கிய வெண்பூசணி – 200 கிராம்,

குழைய வேக வைத்த சாதம் – அரை கப்

எண்ணெய் – 1 டீஸ்பூன்.

கொத்தமல்லி சிறிதளவு,

உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

உடல் சூட்டை தணிக்கும் வெண்பூசணி தயிர் சாதம் – ருசியாக செய்வது எப்படி

செய்முறை விளக்கம்
முதலில் வெண்பூசனியின் தோலைச் சீவி பொடி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

அத்தோடு சிறிது கொஞ்சம் உப்பை சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றாக வெந்த பின், அதில் ஒரு கப் தயிர் மற்றும் அதற்கேற்ற அளவு சாதம் சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானது எண்ணெய்யை ஊற்றி சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை ஆகியவை சேர்த்து நன்றாக தாளித்து அதனை பூசணியில் சேர்த்து கிளறவும்.

இறுதியில், அதனோடு கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான பூசணி தயிர்சாதம் ரெடி.

Related posts

அதிமதுரம் சாப்பிடும் முறை

nathan

தெரிஞ்சிக்கங்க…புரோட்டா பிரியரா? அப்போ இந்த பிரச்சினை உங்களுக்கு வரலாம்? அறிவியல் விளக்கம்

nathan

உங்களுக்கு தெரியுமா பால் குடிப்பதால் 20 வயதிற்கு மேல் உயரத்தை அதிகரிக்க முடியுமா?

nathan

பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா?

nathan

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

nathan

aval benefits in tamil – அவல் ஆரோக்கிய நன்மைகள்

nathan

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்காத பயன்கள்:

nathan

3 சீக்ரெட்ஸ் – டயட். ஆக்டிவ். ரிலாக்ஸ்.

nathan

அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும் உகாதி பச்சடி

nathan