25.3 C
Chennai
Friday, Dec 27, 2024
liver3 16444847
மருத்துவ குறிப்பு

கல்லீரலில் பிரச்சனை எதுவும் வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

மனித உடலில் பல உறுப்புக்கள் உடலின் முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அவற்றில் ஒன்று தான் கல்லீரல். இத்தகைய கல்லீரல் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுதல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிப்பது போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த கல்லீரல் மனித உடலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு பொறுப்பு என்பது தெரியுமா? ஆம். ஆகவே நமது உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென்று நினைத்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நற்பதமான உணவுகள் மற்றும் பச்சையான உணவுகளை உண்பது கல்லீரலுக்கு நல்லது. அதே வேளையில் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்களில் இருந்து பாதுகாக்கவும் வேறுசில உணவுகளும் உதவுகின்றன. இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம். அதைப் படித்து தெரிந்து, அவற்றை உங்கள் உணவில் அதிகம் சேர்த்து உங்கள் கல்லீரலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பச்சை இலைக் காய்கறிகள்

பசலைக்கீரை, வெந்தயக்கீரை, கடுகு கீரை. கோதுமைப்புல், பீட்ரூட் இலைகள் போன்ற கீரைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, நைட்ரேட், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. இவை அனைத்துமே கல்லீரலை ஆதரிக்கவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதோடு, இந்த கீரையில் குளோரோபில் அதிகம் உள்ளது. இது கல்லீரலில் நச்சுக்கள் மற்றும் கன உலோகங்களை நடுநிலையாக்க உதவுகிறது.

கிரேப்ஃபுரூட்

கிரேப்ஃபுரூட்டில் வைட்டமின் சி, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இவை நாள்பட்ட அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. ஆய்வின் படி, கிரேப்ஃபுரூட்டில் கல்லீரல் இழைநார் வளர்ச்சியைக் குறைக்க உதவும் நரிங்கெனின் மற்றும் நரிங்கின் ஆகிய 2 முக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகின்றன.

காபி

பலரும் விரும்பி குடிக்கும் காபியை மிதமான அளவில் குடித்து வந்தால், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் காபியில் பாலிஃபீனால் என்னும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆய்வுகளின் படி, காபி கல்லீரலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, ப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது மற்றும் கல்லீரல் அழற்சியின் வளர்ச்சிக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கக்கூடியது. எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு கப் காபியைக் குடியுங்கள்.

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர்

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளில் நச்சுக்களை நடுநிலையாக்க உதவும் ப்ளேவோனாய்டுகள், பைட்டோநியூட்ரியண்ட்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை குளுக்கோசினோலேட்டுகளைக் கொண்டிருக்கின்றன. இது இரத்தத்தில் இருந்து கன உலோகங்களை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது.

பீட்ரூட்

பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பீட்டாலைன்கள், பீடின், பெக்டின், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதோடு இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இது பித்த நீரின் ஓட்டத்தைத் தூண்டி, உடலில் இருந்து வேகமாக வெளியேற்றும் அளவில் கழிவுகளை உடைத்தெறிகிறது.

நட்ஸ்

நட்ஸில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிசாச்சரேட்டட் கொழுப்புக்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. இந்த கொழுப்பு அழற்சி எதிர்ப்பு கொழுப்புக்களாகும் மற்றும் இது கொழுப்பு தேங்குவதைத் தடுக்கின்றன. நட்ஸ்களில் வால்நட்ஸில் அர்ஜினைன் உள்ளது. இது உடலில் இருந்து அம்மோனியாவை அகற்ற உதவுகிறது.

முழு தானியங்கள்

தானியங்கள் மற்றும் தினைகளான ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, பீர்ட் தினை, கோடோ தினை போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமானத்திற்கு உதவி புரிந்து, கல்லீரலின் பணியை எளிதாக்குகின்றன. அதிலும் ஓட்ஸில் உள்ள குளுக்கன்கள் கல்லீரலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

பூண்டு

பூண்டில் அல்லிசின், வைட்டமின் பி6, செலினியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. பூண்டில் உள்ள சல்பர் ஆன்டி-பயாடிக், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகியவற்றின் கலவையாகும். மேலும் இதில் உள்ள செலினியம் கல்லீரலைத் தூண்டி நச்சுக்களை வெளியேற்றும். ஆகவே அன்றாட சமையலில் பூண்டு சேர்க்க மறக்காதீர்கள்.

தண்ணீர்

எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் பானம் தான் தண்ணீர். ஒருவர் தினமும் போதுமான அளவு நீரைக் குடித்து வந்தால், உடலில் இருந்து நச்சுக்கள் எளிதில் வெளியேறி, கல்லீரலின் பணி எளிதாகும். இதன் மூலம் கல்லீரலில் நச்சுக்கள் தேங்குவதைத் தடுக்கலாம்.

மஞ்சள்

சமையலில் நாம் சேர்க்கும் ஓர் மசாலாப் பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் மருத்துவ குணங்களைக் கொண்டது. ஆய்வுகளின் படி, மஞ்சள் பித்த நீரின் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் கல்லீரலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது. அதோடு மஞ்சள் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவுகிறது. ஆகவே கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உங்களின் அன்றாட சமையலில் தவறாமல் மஞ்சளை சேர்த்து வாருங்கள்.

Related posts

சிறுநீரகக்கற்கள் – தொல்லையும் தீர்வும்

nathan

மழைக்கால நோய்கள்: டெங்கு முதல் டைபாய்டு வரை

nathan

உங்கள் நோய்களை குணமாக்கும் மலர் சிகிச்சை கேள்விப்பட்டிருக்கீங்களா? இதப் படிங்க!!

nathan

தீராத சளி த்தொல்லை தீர…..

nathan

தொற்றினால் வரும் தொல்லை!

nathan

டாப் 7 ஆன்டிஆக்ஸிடன்ட் மூலிகைகள்!

nathan

பொடுகு பிரச்னையை தீர்க்கும் மருத்துவம்

nathan

தாங்க முடியாத காது வலியா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சை

nathan