28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
Capture 18
ஆரோக்கிய உணவு

நாகலிங்க பூவில் இவ்வளவு சிறப்புக்கள் இருக்கா?நம்ப முடியலையே…

தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.

பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை. நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம்.

ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது.

ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள். இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க பூவைக்கொண்டு இறைவனை வணங்குவோம்.

கடன் நீக்கி வல்லமை தரும் இந்த மரத்தின் இலைகளை அரைத்துத் தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும் பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ ஜுரத்துக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.

நமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். நமது வேண்டுதல்கள் நிறை வேறிய பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம். அதுவரை அது எவ்வளவு காய்ந்து போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.

Related posts

உணவில் மட்டனை அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ் ! உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க தினம் பாதாம் உண்ணுங்கள்…!

nathan

உலர் பழங்கள் ஆபத்தை ஏற்படுத்துமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?…

nathan

கார உணவுகள் உடலுக்கு நல்லதா?

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தூதுவளையின் மருத்துவ குணங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா பனங்கிழங்கை இந்தப் பொருளுடன் இப்படி செய்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்…!

nathan

முடவட்டுக்கிழங்கின் நன்மைகள் – mudavattukal kilangu benefits

nathan

பெண்களை அதிகம் தாக்கும் தைராய்டு…

nathan