29.7 C
Chennai
Saturday, Sep 12, 2026
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொழுப்பை அடித்து விரட்டும் அதிசய சூப்…!

பேபி கார்னில் குறைவான கலோரி உள்ளது மற்றும் கொழுப்பு என்பது சுத்தமாக இல்லை. பேபி கார்னில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் – 10
மைசூர் பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பட்டை – சிறு துண்டு
இலவங்கம் – 2
எலுமிச்சம்பழச்சாறு – 1 ஸ்பூன்
கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி
வெண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
செய்முறை

பேபி கார்னை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும் கடாயில் வெண்ணெய் போட்டு பட்டை, இலவங்கம் தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி அதனுடன் பேபி கார்னையும் சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் சேர்ந்து நன்கு வதங்கியதும் வெந்த பருப்பையும், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி மிளகு தூள், எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவி சூடாக பரிமாறவும். சுவையான சத்தான பேபி கார்ன் சூப் ரெடி.

Related posts

கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?…

nathan

வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம்

nathan

சுவையான வெஜிடேபிள் மயோனைஸ் சாண்ட்விச் ரெசிபி

nathan

அடுப்பில்லை, எண்ணெயில்லை… ஆரோக்யத்துக்கு அடித்தளமிடும் இயற்கை சமையல் முறை!

nathan

மாதுளையின்ஆரோக்கிய நன்மைகள்! இதை சாப்பிடாமல் இருக்கக்கூடாது!

nathan

இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க..

nathan

கோடையில் டயட்டில் இருக்கும் போது கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா எலும்புக்கும், நரம்புக்கும் வலிமை தரும் கொள்ளுப்பொடி

nathan