24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
067 suraikkai poriyal
சமையல் குறிப்புகள்

சுவையான சுரைக்காய் பொரியல்

கோடையில் சுரைக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே சுரைக்காயை பொரியல் செய்து கோடையில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இங்கு சுரைக்காய் பொரியல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Bottle Gourd Poriyal
தேவையான பொருட்கள்:

சுரைக்காய் – 1 கப்
வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
கடுகு – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, பின் சுரைக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி, சுரைக்காய் நன்கு மென்மையாக வெந்தது, தண்ணீர் முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை தூவி பிரட்டி இறக்கினால், சுரைக்காய் பொரியல் ரெடி!!!

Related posts

சூப்பரான பீன்ஸ் உருளைக்கிழங்கு அவியல்

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல்

nathan

சுவையான தயிர் பூரி

nathan

இல்லத்தரசிகளே!.. எந்தெந்தக் காயை எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?…

nathan

பெண்களுக்கான சமையல் குறிப்புக்கள்

nathan

பெப்பர் குடைமிளகாய் சிக்கன்

nathan

காலை உணவாக சாக்லேட் சாண்ட்விச்

nathan

டிப்ஸ்… டிப்ஸ்..

nathan

சுவையான காளான் சீஸ் சாண்ட்விச்

nathan