மருத்துவ குறிப்பு

கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா?

ஒரு பெண்ணின் கர்ப்பகாலம் அந்த பெண்ணிற்கு மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க கூடிய ஒன்று. கர்ப்பகாலத்தில் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி படிநிலையும் அவர்களை அற்புதமாக உணர செய்யும். அதில் மிக முக்கியமான ஒன்று குழந்தையின் நகர்வு.

கர்ப்பகால பயணத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் நகர்வு, அதன் தாய்க்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும். பொதுவாக சுறுசுறுப்புடன் இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக இருக்கும். அதனால் குழந்தைகளின் நகர்வு குழந்தையின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. குழந்தைகள் கருவில் நகர துவங்கியவுடன் ஏன் இரவில் விழித்திருக்கிறார்கள்? இங்கு அதற்கான காரணங்களையும், அது பாதுகாப்பானதா என்பதை பற்றியும் பார்க்கலாம்.

குழந்தை கருவில் நகர துவங்கும் காலம்

சராசரியாக, குழந்தை கருவில் 18 வாரங்களில் நகர துவங்குவதை உங்களால் உணர முடியும். இது நீங்கள் முதல்முறை கருத்தரித்திருக்கிறீர்களா இல்லையா என்பதை பொறுத்தது. ஒருவேளை இது உங்கள் முதல் குழந்தையாக இருந்தால், நீங்கள் குழந்தையின் நகர்வை உணர 20 வார காலம் ஆகலாம். அதுவே உங்கள் இரண்டாவது குழந்தையாக இருந்தால், நீங்கள் குழந்தையின் சிறிய அசைவை கூட உங்களால் 16 வாரங்களிலேயே உணர முடியும். ஆனால் சில குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் போது குழந்தையின் நகர்வை சரிவர உணர முடியாமலும் போகலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இது குறிப்பாக உங்கள் நஞ்சுக்கொடி கருப்பையின் முன் உள்ளதா அல்லது உங்கள் உடலின் எடை அதிகமாக உள்ளதா என்பதை பொறுத்து மாறுபடுகிறது.

குழந்தையின் நகரும் போது உணர்வு எப்படி இருக்கும்

கருவில் குழந்தையின் நகர்வு சிறகடிப்பது போன்ற உணர்வை தரும், உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது குழந்தைகள் உருளும் போதும், மேலும் கீழுமாக நகர்ந்து விழும் போதும் இந்த உணர்வு ஏற்படும். குழந்தை வேகமாக நகரும் போது வயிற்றில் இடிப்பது உதைப்பதாக தோன்றும். குழந்தையின் அடுத்த அடுத்த வளர்ச்சி நிலையில் நீங்கள் இதை அடிக்கடி உணரலாம்.

இந்த உணர்வு குழந்தையின் செய்கை மற்றும் அவர்களின் வளர்ச்சி நிலையை சார்ந்து மாறுபடும். ஒவ்வொரு குழந்தையும் மற்ற குழந்தைகளில் இருந்து வேறுபடுவதால், இவை மாறுபடலாம். உங்கள் குழந்தை வளர வளர உங்கள் கருப்பை விரிவடைவதால் நீங்கள் எளிதாக குழந்தையின் நகர்வை உணர முடியும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கருவில் இருக்கும் குழந்தை இரவில் நகர்வது பாதுகாப்பானதா?

அமெரிக்காவில் இருக்கும் கர்ப்பகாலத்தில் நடத்திய சோதனையில் பெரும்பாலான குழந்தைகள் பகலை விட இரவில் அதிகமாக நகர்வதாக கண்டறிந்துள்ளனர். பெரும்பாலும் குழந்தைகள் அசௌகரியமாக உணரும் போது, நீங்கள் ஒரு அதிவேக உதையை உணர முடியும். இது குழந்தையின் கெட்ட கனவு, அசௌகரியம் மற்றும் குழந்தை வளர்வதற்கான இடப் பற்றாக் குறையின் காரணமாக ஏற்படலாம். குழந்தையின் வளர்ச்சி அதை சுற்றி இருக்கும் சூழலை வைத்தே இருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். குழந்தையின் இரவில் நகர்வது பிரச்சனைக்கு உரிய ஒன்றல்ல.

 

உங்கள் குழந்தை இரவில் சுறுசுறுப்பாக இருக்கலாம்

குழந்தைகள் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நகர்வார்கள். உங்கள் குழந்தை இரவில் மட்டும் நகர்ந்தால், நீங்கள் தூங்கும் போது குழந்தை சுறுசுறுப்பாக இருக்கலாம். அதாவது நீங்கள் விழித்திருக்கும் போது குழந்தை அதிகம் தூங்குவதாக அர்த்தம். குழந்தைகள் கருவில் இருக்கும் போது குறைந்தது 20 முதல் 40 நிமிடம் வரை உறங்குவார்கள். சில நேரங்களில் 90 நிமிடங்கள் வரையும் உறங்குவார்கள். அவர்கள் உறங்கி கொண்டிருக்கும் போது எந்த ஒரு அசைவையும் ஏற்படுத்தமாட்டார்கள்.

ஒவ்வொரு குழந்தையின் செயல்பாடும் மற்றவர்களில் இருந்து மாறுபடும். சில குழந்தைகள் இரவில் சுறுசுறுப்புடன் இருக்கலாம். மற்ற குழந்தைகள் நாளின் வேறு ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நகரலாம்.

நீங்கள் இரவில் அதிகமாக உணரலாம்

நீங்கள் மற்ற நேரத்தை விட உங்கள் குழந்தையின் நகர்வை இரவில் அதிகமாக உணர்வது ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் பகலில் நடப்பது, நிற்பது அல்லது மற்ற வேலைகளில் கவனத்தை செலுத்துவதால் உங்கள் குழந்தையின் நகர்வை உணராமல் இருந்திருக்கலாம். இரவில் ஓய்வாக படுத்திருக்கும் போது, உங்கள் குழந்தையின் நகர்வை நீங்கள் அதிகமாக உணர்வீர்கள்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

உங்கள் குழந்தையின் அசைவு குறைவதை பரிசோதிக்கும் வழி

உங்கள் குழந்தையின் அசைவு குறைவதாகவோ அல்லது திடீரென நின்றவிட்டாலோ, இது பிரச்சனைக்கான அறிகுறி. நீங்கள் கருத்தரித்த 24 வாரங்களுக்கு பின்னும் அசைவுகள் இல்லாவிட்டாலோ அல்லது அசைவுகள் குறைவாக இருந்தாலோ நீங்கள் பரிசோதிக்க ஒரு எளிய வழி இருக்கிறது.

உங்கள் வயிற்றிற்கு ஆதரவாக தலையணை வைத்து இடது புறமாக சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள். இப்போது தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு குழந்தையின் அசைவை கவனியுங்கள். இந்த 2 மணி நேரத்தில் குறைந்தது 10 அசைவுகளையாவது நீங்கள் உணர வேண்டும்.

அப்படி உணரவில்லை என்றால், இது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். மருத்துவர் உங்கள் குழந்தையின் அசைவு மற்றும் இதயத்துடிப்பை பரிசோதித்து ஏதாவது தவறாக இருந்தால் கண்டறியுவார். உங்கள் குழந்தையின் செயல்பாடுகளில் ஏதாவது அசாதாரணமான மாற்றங்களை நீங்கள் கவனித்தால் மருத்துவ உதவியையும் பெறுவது நல்லது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button