23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 156966
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தை பிறந்ததிலிருந்து நிம்மதியா தூங்க முடியலையா?இதோ அற்புதமான எளிய தீர்வு

உங்களின் மகப்பேற்றுக்குப் பின்பு தூக்கம் இல்லாமல் தவிப்பது சாதாரண விஷயம் இல்லை. நீங்கள் கர்ப்ப காலத்தில் இருக்கும் போது சரியாகத் தூங்க முடியாமல் இரவில் எழுந்து பாத்ரூமிற்கு மற்றும் உங்களின் பசியினை தீர்க்க சமையலறைக்கும் அலைந்து தூக்கம் இல்லாமல் தவித்து இருப்பீர்கள். அதிலும் கடைசி மூன்று மாதங்களில் தூக்கம் இல்லாமல் மிகவும் சீரமத்திற்கு ஆளாகி இருப்பீர்கள்.

அதேபோல் மருத்துவமனையில் குழந்தை பிறந்த பிறகு அவர்கள் அழுது கொண்டே இருப்பதினால் உங்களால் நிம்மதியான தூக்கத்தினை மேற்கொள்ள முடியாது. அத்துடன் ஒவ்வொரு முறையும் சோதனைக்காகச் செவிலியர்கள் மாற்றி மாற்றி உங்களை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். இவை அனைத்தையும் தண்டி நீங்கள் வீட்டிற்கு வந்த பிறகும் உங்களால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்றால் அதற்கு சில காரணங்கள் உள்ளன.

தூக்கமின்மை

பிரசவத்திற்குப் பிறகு தூக்கமின்மை என்பது எல்லா பெண்களுக்கும் ஏற்படும் ஒன்றாகும் இதனால் பெண்களின் உடல் நலத்தைப் பாதித்து மன அழுத்தத்தினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உங்களின் சிறிய குழந்தை ஆழ்ந்த தூக்கத்தினை மேற்கொள்ளும் போது மட்டும் தான் உங்களால் நிம்மதியாகத் தூங்க முடியும். அப்போதும் உங்களால் நிம்மதியான தூக்கத்தினை மேற்கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று அர்த்தம் இதற்கான காரணங்கள் சில உள்ளன.

 

காரணங்கள்

குழந்தைகள் பிறந்த பிறகு உங்கள் ஹார்மோன்களில் சில வகை மாற்றங்கள் மற்றும் குறைபாடுகள் இருக்கும். இவை மீண்டும் இயல்பான செயல்முறைக்கு வருவதற்குச் சற்று நேரம் எடுக்கும். இதனால் தான் உங்கள் உள் உறுப்புகள் தூங்குவது மற்றும் எழுவது போன்ற வேலைகளை மாற்றி மாற்றிச் செய்கிறது.

பிரசவ காலத்திற்குப் பிறகு இரவில் வியர்ப்பது பொதுவான பிரச்சனை தான். கர்ப்ப காலத்தில் உங்களுக்கும் குழந்தைக்கும் ஆதரவு அளித்த நீர் இனி அவசியம் இல்லை என்பதால் இது வியர்வை வழியாக வெளியேறுகிறது.

பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வு கூட உங்களின் தூக்கமின்மைக்குக் காரணமாக இருக்கலாம். அதிகமான மனச்சோர்வு ஏற்பட்டால் மருத்துவரைச் சென்று பார்ப்பது சிறந்தது.

இரவில் குழந்தைக்கு உணவு அளிக்க எழுந்து இருப்பதால் உங்களின் அன்றாட தூக்கப்பழக்கம் மாறுவதினால் கூட தூக்கமின்மை ஏற்படும்.

தூக்கமின்மையின் அறிகுறிகள்

குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற மன அழுத்தினால் தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதனால் மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இதற்குக் கண்டிப்பாக மருத்துவ உதவி தேவைப்படும்.

உங்கள் உடலுக்குத் தேவையான அளவு ஓய்வு எடுக்க முடியாவிட்டால், நீங்கள் எரிச்சல் அடைவீர்கள். மேலும் ஒரு நாள் போதுமான ஓய்வு இல்லாவிட்டாலும் மூளையின் செயல்களில் மாற்றத்தினை ஏற்படுத்தி எல்லா விஷயங்களுக்கும் உங்களை எரிச்சல் அடையச் செய்யும்.

உங்களுக்கு வெகு நாட்களாகத் தூக்கமின்மை ஏற்பட்டால் நீங்கள் மனதளவில் சோர்வடைந்து மிகவும் கவலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் தூங்க வேண்டும் என்று நினைத்தாலும் உங்களின் எண்ணங்கள் முழுவதும் தேவையற்ற விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டு உங்களைத் தூங்க விடாமல் செய்யும்.

 

தூக்கமின்மையைப் போக்கக் குறிப்புகள்

இரவில் குழந்தைகளுக்கு உணவு அளிக்க எழுந்திருக்கும்போது மிகப் பிரகாசமான லைட்களை பயன்படுத்த வேண்டாம். சிறிய அளவில் உள்ள லைட்களை உபயோகித்தால் போதும்.

நீண்ட நேரம் மொபைல் போன்கள் மற்றும் சோஷியால் மீடியாக்களை பயன்படுத்தாதீர்கள். அதாவது பிரகாசமான லைட்கள் மற்றும் மொபைல் போன்களில் இருந்து வரும் வெளிச்சத்தினால் உங்கள் கண்கள் மற்றும் உடலின் உள் உறுப்புகள் காலை நேரம் என்று நினைத்து தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

உங்களின் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல பங்குதாரர் இருந்தால் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர் உங்களின் பணிச்சுமையை பகிர்ந்து கொள்ளுவதால் உங்களுடைய சொந்த ஆரோக்கியத்தில் நீங்கள் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள நேரம் கிடைக்கும். இரவில் அடிக்கடி எழுந்திருக்கும் அவசியம் இல்லாமல் பாட்டிலில் பால் தயார் செய்து வைத்து விட்டால் அவர் குழந்தை அழும்போது பார்த்துக் கொள்வர். இதனால் நீங்கள் உறங்குவதற்கு நேரம் கிடைக்கும்.

குழந்தைகள் தூங்கும் போது வேலைகளை முடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். குழந்தைகள் தூங்கும் போது நீங்களும் ஓய்வு எடுப்பதற்குச் செல்லுங்கள். எல்லா நேரங்களிலும் சொல்லாவிட்டாலும் முதல் இரண்டு மாதங்களுக்கு உங்களின் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஓய்வு எடுங்கள்.

இரவு சீக்கிரமாகப் படுகைக்குச் செல்லுவதை வழக்கமாகிக் கொள்ளுங்கள். எயெனில் இரவு குழந்தை அழும் போது நீங்கள் எழுந்திருக்க வேண்டும். எனவே சீக்கிரம் படுகைக்குச் செல்லும் போது சற்று கூடுதலாக ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும்.

நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு தியானத்தில் ஈடுபடலாம். அல்லது சூடான நீரில் ஒரு குளியல் அல்லது நல்ல மசாஜ் போன்றவற்றைச் செய்யும் போது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தினை தரும்.

 

ஆழமாகச் சுவாசியுங்கள். இது உங்களுக்கு மன அமைதியைத் தந்து தூக்கத்தினை ஏற்படுத்தும். இவை அனைத்தையும் பின்பற்றி நிம்மதியான உறக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

Related posts

உங்களுக்கு சீக்கிரமா வயசாகாம இருக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிஞ்சிக்கங்க… கூச்ச உணர்வு, கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை குறைக்க 5 எளிய வீட்டு வைத்தியம்..!!

nathan

உங்க ராசிப்படி எந்த இரண்டு ராசிக்காரங்கள திருமணம் செஞ்சா உங்க வாழ்க்கை சூப்பரா இருக்கும் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத, பேசக் கூடாத சில விஷயங்கள்

nathan

உணவில் துவர்ப்பு சுவையை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்……!

nathan

ஜாக் கிரதை! உள்ளாடையில் இந்த சிறிய தவறை செய்கிறீர்களா?

nathan

கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர் களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உணவை சாப்பிட்ட பின் கண்டிப்பாக பால் குடிக்க கூடாது..?

nathan

உங்கள் பெயர் D எழுத்தில் தொடங்குகிறதா? – தெரிந்து கொள்ளுங்கள்!

nathan