28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
12 capsicumchicken
சமையல் குறிப்புகள்

பெப்பர் குடைமிளகாய் சிக்கன்

பேச்சுலர்களுக்கு எப்போதும் சிக்கன் மசாலா, சிக்கன் குழம்பு என்று செய்து போர் அடித்திருக்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை பேச்சுலர்களுக்காக மிகவும் சிம்பிளாக பெப்பர் குடைமிளகாய் சிக்கனை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.

மேலும் இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். முக்கியமாக மதிய வேளையில் 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும். சரி, இப்போது பெப்பர் குடைமிளகாய் சிக்கனின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Spicy Pepper Capsicum Chicken Recipe
தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
பிரியாணி இலை – 1
மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள சிக்கனை குக்கரில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அதில் வேக வைத்துள்ள சிக்கனை அப்படியே வாணலியில் போட்டு, மிளகுத் தூள், கசகசா சேர்த்து, குறைவான தீயில் நன்கு பச்சை வாசனை போக பிரட்டி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பெப்பர் குடைமிளகாய் சிக்கன் ரெடி!!!

Related posts

முருங்கைக்கீரை முட்டை பொரியல்….! பத்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்

nathan

சுவையான திணை பாயாசம்

nathan

கத்திரிக்காய் கார குழம்பு

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

nathan

பச்சை பயறு கடையல்

nathan

சுவையான முட்டை சமோசா கோதுமை மாவில் செய்யலாம்….

nathan

paneer recipe – பன்னீர் கிரேவி

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு அற்புதமான எளிய தீர்வு

nathan