உடல் எடையைக் குறைக்க நினைப்போர் பலரும் ஓட்ஸை தங்களை காலை உணவாக எடுத்து வருவார்கள். அதிலும் இதனை பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வருவார்கள். ஆனால் இப்படியே தினமும் செய்து சாப்பிட்டு பலருக்கும் போர் அடித்திருக்கும்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஓட்ஸைக் கொண்டு எப்படி உப்புமா செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.
Oats Upma Recipe
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 1 கப்
தண்ணீர் – 3-4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் ஓட்ஸை வாணலியில் போட்டு லேசாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு நாண்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து கிளறி, 1-2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். ஓட்ஸானது மென்மையாகும் வரை, அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, கிளறி விட்டு மூடி வைத்து வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், ஓட்ஸ் உப்புமா ரெடி!!!