28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
egg bread masala
ஆரோக்கிய உணவு

சுவையான முட்டை பிரட் மசாலா

முட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும்.

இதனை அப்படியே சாப்பிடலாம். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பிரட் – 8 துண்டுகள்
முட்டை – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை வேக வைத்து, தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், பிரட் துண்டுகளின் முனைகளில் உள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் ஊற்றி பொன்னிறமாகவும், மொறுமொறுவென்றும் டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு பச்சை வாசனை போனதும், வாணலியில் ஒவ்வொரு வேக வைத்த முட்டையையும் ஆறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, முட்டையில் மசாலா சேர மெதுவாக பிரட்டி விட வேண்டும்.

இறுதியில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளையும் சிறு துண்டுகளாக்கி வாணலியில் சேர்த்து ஒரு முறை பிரட்டி இறக்கினால், முட்டை பிரட் மசாலா ரெடி!!!

Related posts

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்களாம் பால் குடிக்கக்கூடாதாம்..

nathan

சூப்பர் டிப்ஸ்! மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்

nathan

ஆப்பிளுக்கு ஈடான சத்து கொய்யாவில்..

nathan

உங்களுக்கு தெரியுமா இவ்வளவு சத்துக்களை கொண்டதா நிலக்கடலை….!

nathan

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். …..

sangika

செரிமான பிரச்சனையை குணமாக்கும் அப்ரிகாட் பழம்

nathan

உங்களுக்கு தெரியுமா தேனை எந்தெந்த ஜூஸில் கலந்து குடிச்சா என்னென்ன நோய்கள் தீரும் தெரியுமா?

nathan

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

nathan