28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
apple 161
ஆரோக்கிய உணவு

எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது-ன்னு தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

 

உங்களுக்கு எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று சரியாக தெரியாதா? ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட்டால் அதன் முழு நன்மையைப் பெறலாம் என்ற ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டார்க் சாக்லேட்

சாப்பிட சிறந்த நேரம்

காலை உணவின் போது ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை வழங்கி, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் மற்றும் அது இதயத்திற்கும் மிகவும் நல்லது.

எப்போது சாப்பிடக்கூடாது?

ஒரு நாளைக்கு 25 கிராமுக்கும் அதிகமான அளவில் டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், அது உடலில் கொழுப்புக்களை அதிகமாக தேங்க ஆரம்பித்து, உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும். எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடாதீர்கள்.

இறைச்சிகள்

சாப்பிட சிறந்த நேரம்

இறைச்சிகளை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். ஏனெனில் இறைச்சி உணவுகளில் இரும்புச்சத்து வளமான அளவில் உள்ளது. இச்சத்து உடலில் உள்ள செல்கள் மற்றும் பிற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது. ஆக்ஸிஜன் சரியான அளவில் கிடைத்தால், அது உறுப்புக்களை சிறப்பாக செயல்படச் செய்து, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். குறிப்பாக உடல் சோர்வைக் குறைக்கும்.

எப்போது சாப்பிடக்கூடாது?

இறைச்சிகள் செரிமானமாவதற்கு 5 மணிநேரம் எடுக்கும். இதை இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால், செரிமான மண்டலம் பாதிக்கப்படுவதோடு, இரவு தூக்கத்தில் இடையூறும் ஏற்படும்.

நட்ஸ்

சாப்பிட சிறந்த நேரம்

நட்ஸ்களை சாப்பிட உகந்த காலம் மதிய வேளையாகும். ஒரு கையளவு நட்ஸில் உடலுக்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த அமிலங்கள் இரத்த நாளங்களை சிறப்பாக வைத்திருப்பதோடு, இரத்த அழுத்தத்தை சீராக்கும் மற்றும் நுரையீரல் செயல்பாட்டிற்கும் உதவும்.

எப்போது சாப்பிடக்கூடாது?

நட்ஸ்களில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

ஆரஞ்சு

சாப்பிட சிறந்த நேரம்

ஆரஞ்சு பழங்கள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஒரு அற்புதமான உணவுப் பொருள். இதை ஸ்நாக்ஸ் வேளையில் சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.

எப்போது சாப்பிடக்கூடாது?

ஆரஞ்சு பழங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அலர்ஜியை உண்டாக்குவதோடு, வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி, இரைப்பை அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கும்.

பாஸ்தா

சாப்பிட சிறந்த நேரம்

பாஸ்தா சாப்பிட உகந்த நேரம் காலை மற்றும் மதியம் ஆகும். கோதுமை பாஸ்தாவில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் பாஸ்தாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

எப்போது சாப்பிடக்கூடாது?

பாஸ்தாவை இறைச்சியுடன் சேர்த்து பரிமாறும் போது, அந்த பாஸ்தாவானது உயர் கலோரி உணவாகிறது. இரவு நேரத்தில் கலோரி குறைவான உணவுகளை சாப்பிடுவதே சிறந்தது. எனவே பாஸ்தாவை இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

தக்காளி

சாப்பிட சிறந்த நேரம்

தக்காளியில் உள்ள ஆர்கானிக் அமிலங்கள் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் இது வயிறு மற்றும் கணையங்களின் செயல்பாட்டையும் சீராக்கும். எனவே செரிமான பிரச்சனையைத் தவிர்க்க, காலை வேளையில் தக்காளியை சாப்பிட்டு, அதன் பலனைப் பெறுங்கள்.

எப்போது சாப்பிடக்கூடாது?

அதிகளவிலான ஆக்சாலிக் அமிலம் உடலில் நீர்-உப்பு வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தக்காளியை இரவு நேரத்தில் சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், அது உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்தி, உடல் வீக்கத்தை உண்டாக்கும்.

உருளைக்கிழங்கு

சாப்பிட சிறந்த நேரம்

உருளைக்கிழங்கு காலை வேளையில் சாப்பிட ஏற்றது. உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. மேலும் உருளைக்கிழங்கில் உடலுக்குத் தேவையான கனிமச்சத்துக்கள் உள்ளன.

எப்போது சாப்பிடக்கூடாது?

உருளைக்கிழங்குகளில் மற்ற காய்கறிகளை விட 2-3 மடங்கு அதிகளவில் கலோரிகள் நிறைந்துள்ளன. எனவே இரவு நேரத்தில் அதிகளவு கலோரிகள் நிறைந்த உருளைக்கிழங்குகளை சாப்பிடாதீர்கள்.

வாழைப்பழம்

சாப்பிட சிறந்த நேரம்

வாழைப்பழத்தை சாப்பிட உகந்த நேரம் மதிய வேளை தான். ஏனெனில் வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவல்லது மற்றும் இது நெஞ்செரிச்சலைக் குணப்படுத்தும்.

எப்போது சாப்பிடக்கூடாது?

வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது செர்மான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தும் மற்றும் சளி உற்பத்திக்கு வழிவகுக்கும்.

ஆப்பிள்

சாப்பிட சிறந்த நேரம்

ஆப்பிளை காலை உணவின் போது சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் ஆப்பிளை தோலுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் ஆப்பிளின் தோலில் தான் பெக்டின் என்னும் பொருள் உள்ளது. இது குடல் செயல்பாட்டிற்கு உதவி புரிவதுடன், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை நீக்கும்.

எப்போது சாப்பிடக்கூடாது?

ஆப்பிளை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஆப்பிள் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை அதிகரிக்கும் மற்றும் இது அசௌகரியத்திற்கும் வழிவகுக்கும். அதோடு பெக்டின் செரிமானமாக கடினமாக இருப்பதால், அதிக நேரம் எடுக்கும்.

சீஸ்

சாப்பிட சிறந்த நேரம்

சீஸ் நிறைந்த உணவுகளை மிதமான அளவில் சாப்பிட்டால், அது வயிற்று உப்புசம் மற்றும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும். சீஸ் உணவுகளை சாப்பிட சரியான நேரம் காலை வேளை தான்.

எப்போது சாப்பிடக்கூடாது?

சீஸ் செரிமானமாவதற்கு கடினமாக இருக்கும். இந்த உணவை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது அஜீரண பிரச்சனையை ஏற்படுத்திவிடும். எனவே இரவு நேரத்தில் சீஸ் உணவுகளை சாப்பிடாதீர்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

பொன்னாங்கண்ணி கீரையின் பொன்னான ஆரோக்கிய நன்மைகள்!

nathan

சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்ய…!

nathan

பாதாமும்.. பக்க விளைவுகளும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது?

nathan

உணவுகளின் மூலம் வரும் கொழுப்புச் சத்தை உடல் உறுஞ்சுதலைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

ஜாக்கிரதை…!மறந்தும் கூட காலை உணவாக இதை சாப்பிட்டு விடாதீர்கள்!

nathan

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட, தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்..!

nathan