பொதுவாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்து உணவு வகைகளும் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்ககூடியவை. அந்த வரிசையில் ஊறுகாய்க்கு தனிப்பட்ட இடமே உண்டு.
ஊறுகாயில் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துகள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கின்றன.
செரிமானத்தை மேம்படுத்துதல், கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்தல் மற்றும் மலச்சிக்கலைத் தடுப்பது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.
ஆனால் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் இது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
அந்தவகையில் தற்போது ஊறுகாய் அதிகளவு எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.
ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.
ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.
ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிகம் இருப்பதால் அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.