29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
7yt687y
ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் எடை உயர்வும் ஆண்களை எளிதில் தாக்கக் கூடியதே.. உண்டி சுருக்கல் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் அழகு!

இருதய அடைப்பு, பக்கவாதம் என எதனை எடுத்துக்கொண்டாலும் சரி, ஆண்களுக்குதான் அதிக எண்ணிக்கையில் வரக்கூடும். இப்படி இருக்கையில் உடல் எடை உயர்வும் ஆண்களை எளிதில் தாக்கக் கூடியதே. எனவே ஆண்களின் உடல் எடை உயர்வுக்கு என்ன காரணம், அதனால் வரக்கூடிய பாதிப்புகள் என்னென்ன, அதற்கான தீர்வுகள் யாது? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடை…

ஒவ்வொருவருக்கும் தன் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருத்தல் என்பது மிக அவசியம். இதனை BMI என்கிற விதிமுறைப்படி உலக சுகாதார அமைப்பு வரையறை செய்கிறது. அதாவது, பி.எம்.ஐ = உடல் எடை / (உயரம்)2.
7yt687y
இதன்படி…

*பி.எம்.ஐ 19 கீழ் இருந்தால் : குறைவான உடல் எடை
*19 முதல் 25 வரை : சரியான உடல் எடை
*25 முதல் 29 வரை : அதீத உடல் எடை
*30 முதல் 35 வரை : உடல் பருமன் முதல் நிலை
*35 முதல் 40 வரை: உடல் பருமன் இரண்டாம் நிலை
*நாற்பதுக்கும் மேல்: உடல் பருமன் மூன்றாம் நிலை. (இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நிலை).

கலோரிகள்…

நாம் சாப்பிடும் எவ்வகை (புரதம், கொழுப்பு, சர்க்கரை சத்து) உணவாக இருந்தாலும் அதிலிருந்து சத்து உறிஞ்சப்பட்டு கலோரிகளாக உடம்பில் தங்கும். நமக்கு ஆற்றல் (நாம் தூங்கும் போது கூட இதயம், மூளை முதலியவை வேலை செய்ய ஆற்றல் தேவை) தேவைப்படும்போது அது ஆற்றலாக மாறி உதவுகிறது. இப்படியான கலோரிகள் தினமும் தேவையான அளவை விட அதிக அளவில் உடலில் சேர்ந்தால் கொழுப்பாக மாறி உடலில் தங்கி இருக்கும். இதுதான் உடற்பருமன் ஏற்படக் காரணம்.

தரவுகள் அறிவோம்…

*மூன்று ஆண்களில் ஓர் ஆண் அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர்.
*பெண்களை காட்டிலும் 34 சதவிகிதம் ஆண்கள்தான் அதிக உடற்பருமன் கொண்டவர்கள்.
*இந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 1,200க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது அதிக உடல் எடையின் காரணமாக குறைந்த விந்தணுக்களின் அளவையும், குறைந்த செயல் திறன் கொண்ட விந்தணுக்களையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணங்களும், ஆபத்துக்காரணிகளும்…

*அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வது,
*அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது,
*தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது,
*அதிக துரித உணவுகள் எடுத்துக் கொள்வது,
*மன அழுத்தம், வேலை பளு,
*முறையற்ற தூக்கம்,
*முறையற்ற உணவு முறை,
*முறையற்ற வாழ்க்கை முறை.

பாதிப்புகள்….

*இளம் வயதில் மாரடைப்பு, சர்க்கரை நோய் வர வாய்ப்புண்டு.
*எளிதில் குழந்தையின்மை குறைபாடு ஏற்படலாம்.
*மன சோர்வு, மன அழுத்தம் ஏற்படும்.
*எலும்புகள் பலவீனமாக மாறக்கூடும்.
*எளிதில் மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற உடல் வலிகள் வரக்கூடும்.
*பக்கவாதம் வரும் வாய்ப்பும் அதிகம்.
*ஞாபக மறதி நோய் வரலாம்.
*இளம் வயதிலேயே கழுத்து, மூட்டு, இடுப்பு எலும்புகள் தேயத் தொடங்கும்.
*தசை நார்களில், ஜவ்வுகளில் எளிதில் காயம் (injury) ஏற்பட வாய்ப்புள்ளது.

தீர்வுகளும், தடுக்கும் வழிகளும்…

*இயன்முறை மருத்துவரை அணுகி தன் உடலுக்கான உடல் எடை அளவு எவ்வளவு என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

*பின் நீங்கள் உடற்பயிற்சி செய்ய ஏதுவான திறன் என்ன என்பதை அவர் உங்களை சில பயிற்சிகள் மூலம் கண்டறிவார்.

*அதை வைத்து உங்கள் ஆற்றலுக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப உடற்பயிற்சிகள் பரிந்துறைத்து கற்றும் கொடுப்பார்கள்.

*ஐம்பது சதவிகிதம் உடற்பயிற்சி என்றால், மீதம் ஐம்பது சதவிகிதம் உணவு மற்றும் வாழ்க்கை முறை தீர்வு என்பதால் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.

*எட்டு மணி நேரத் தூக்கம் அவசியமானது.

*உடற்பயிற்சி செய்ய முடியவில்லை அல்லது விருப்பம் இல்லையென்றால் நடனம், நீச்சல், நடைப்பயிற்சி, ஜாக்கிங், மிதி வண்டி ஓட்டுவது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினசரி குறைந்தது நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு செய்யலாம்.

*குறைந்தது மூன்று வகை பழங்களும், ஐந்து வகை காய்களும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*அதிக நீர் சத்து, நார் சத்து மற்றும் புரத சத்துகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*ஜங்க் உணவுகளான மைதா, துரித உணவு, பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளை கூடுமானவரையில் தவிர்த்துவிடுவது நன்று.

*ஒரு முறை உண்டுவிட்டு மீண்டும் அரை மணி நேரத்தில் வேறு உணவு உண்பது, ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டும் சாப்பிடுவது, தாமதமாக சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, இரவில் அதிக உணவு எடுத்துக்கொள்வது போன்ற தவறான பழக்கங்களை கைவிட்டால் மேலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

*உடல் உழைப்பு தேவைப்படாத துறையில் வேலை செய்வோர் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் மற்றவர்களை விட இவர்களுக்கு உடற்பருமன் வர ஐம்பது சதவிகிதம் கூடுதல் வாய்ப்பு அதிகம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா உடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா?

nathan

அடேங்கப்பா! சுந்தர் பிச்சையின் காதல் மனைவி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

nathan

உஷார்… உங்களுக்கும் இப்படி நடக்கலாம்.! நாட்டு கோழி முட்டையை நம்பாதிங்க..!

nathan

உங்க கணவன்கிட்ட மட்டும் இந்த அறிகுறிகள் இருந்தா… உங்க வாழ்க்கையே நரகமாகிடுமாம்..!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த அழுத்தத்தை குறைக்கும் சந்தன எண்ணெயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரஷர் குக்கரை எப்படி பயன்படுத்தவேண்டும்..

nathan

பச்சிளம் குழந்தைகளுக்கு வெங்காயம் இப்படி எல்லாம் பயன்படுத்தலாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

வியர்வை நாற்றம் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க சிறந்த வழிகள் இதோ….

sangika