16
ஆரோக்கிய உணவு

டயட் அடை

தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா 150 கிராம், துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து – 150 கிராம், காய்ந்த மிளகாய் – 10 (காரத்துக்கு ஏற்ப), உப்பு – தேவைக்கு ஏற்ப, பொடியாக நறுக்கிய சௌசௌ, வெங்காயம் – தலா 1 கப், தேங்காய் – அரை கப்.

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: அரிசி, பருப்பை இரண்டு மணி நேரத்துக்கு ஊறவைத்து, கொரகொரப்பான பக்குவத்தில் அரைக்க வேண்டும். அதில் தாளித்த பொருட்கள், நறுக்கிய காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும். அடுப்பில், தோசைக்கல்லை வைத்து, சின்னச்சின்ன அடைகளாகச் சுட வேண்டும். சௌசௌக்குப் பதிலாக சுரைக்காய், முருங்கைக் கீரை, வாழைப்பூ போன்றவற்றையும் சேர்த்து செய்யலாம். புதிய சுவை கிடைக்கும். அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பலன்கள்
புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின், தாதுஉப்புக்கள், நல்ல கொழுப்பு உள்ளிட்டவை சமச்சீராகக் கிடைக்கின்றன.
பள்ளி செல்லும் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து மிகுந்த சிற்றுண்டி. குழந்தைகளுக்கு அவசியம் பரிந்துரைக்கப்படும் உணவு இது. மதிய உணவு வேளை வரை பசிக்காது.
பெண்கள், கர்ப்பிணிகள் வாரம் இருமுறை சாப்பிட்டுவர, தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. எலும்புகள் உறுதியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
16

Related posts

தெரிஞ்சிக்கங்க… ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் அவரைக்காய்

nathan

ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்…

nathan

ஆட்டுக்கறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் ஆபத்தா! தெரிந்துகொள்வோமா?

nathan

சத்தான சுவையான உளுத்தம் கஞ்சி

nathan

இரத்தம் அதிகரிக்க வேண்டுமா? பீட்ரூட் சாப்பிடுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பழத்தின் கொட்டையை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம்!

nathan

உடல் சூட்டை தணிக்கும் வெண்பூசணி தயிர் சாதம்

nathan

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

nathan