28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
10 1423549440
ஆரோக்கிய உணவு

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் – தெரிஞ்சிக்கங்க…

அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் தற்போதைய உலகத்தில் மக்களின் வாழ்க்கை தரம், உணவு பழக்கம் மற்றும் வேலை பார்க்கும் நேரம் என எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. மேலும் தூய்மையில்லாத சுற்றுச் சூழல் மத்தியில் வாழ்ந்து ஆரோக்கியமில்லாத உணவுகளை உண்ண ஆரம்பித்து விட்டோம். இதனால் நம் உடல் ஆரோக்கியம் வெகுவாக பாதித்து வருகிறது. இதனால் சின்ன வயதிலேயே பலரும் பல வியாதிகளுக்கு உள்ளாகின்றனர். அவைகளில் மிக முக்கியமான ஒன்று தான் இரத்த கொதிப்பு.

இரத்த கொதிப்பை குறைப்பதற்கு சில உணவுகள் உள்ளது. இவைகளை உண்ணும் போது நீங்கள் உண்ணும் மருந்துகளின் அளவும் கூட குறையும். ஏன் சில நேரங்களில் மருந்துகள் உண்ணுவதை முற்றிலுமாக தடுத்து விடலாம். இரத்த அழுத்தம் ஆபத்தான நிலைக்கு உயர்வதை நீங்கள் தடுக்க முயற்சி செய்து வருகிறீர்கள் என்றால் நாங்கள் கூறப்போகும் உணவுகளை தினமும் அதிகமாக உண்ண ஆரம்பியுங்கள். அதையும் இன்றே தொடங்குங்கள். சில உணவுகள் நாம் அன்றாடம் உண்ணக்கூடிய வகைகளே. ஆனால் சில உணவுகளை நீங்கள் வெளியே செல்லும் போது மறக்காமல் வாங்க வேண்டி வரும். இதனோடு சேர்ந்து அதிகரித்த உடற்பயிற்சி மற்றும் வாழ்வு முறையில் மாற்றங்களையும் பின்பற்றினால் நல்ல பயன் கிடைக்கும்.

பட்டாணி

பட்டாணியில் காய்கறி புரதத்துடன், பிற வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளதால், இது உங்களின் ஒட்டுமொத்த இதய குழலிய அமைப்பிற்கு நன்மையை அளிக்கும். இதனால் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க இது உதவும்.

பச்சை பீன்ஸ்

பச்சை பீன்ஸ் உங்கள் இரத்த கொதிப்பின் மீது நேரடியாக செயல்படும். இதனால் உடல் ஆரோக்கிய அளவுகளில் சாதகமான நிலைகள் நிலவும். இது நம் உடலை மூன்று வகையான அம்சங்களில் உதவுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள வைட்டமின் C, நார்ச்சத்து மற்றும் பொட்டாஷியம். இவைகள் உங்கள் உடலின் மீது நேரடியாக செயல்படும்.

பப்பாளி

ஆரஞ்சு பழங்களில் இருந்து வைட்டமின் C கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் பப்பாளியில் அதை விட கூடுதல் அளவில் வைட்டமின் C அடங்கியுள்ளது. இதனோடு சேர்த்து அதில் வைட்டமின்களும், அமிலோ அமிலம் மற்றும் பொட்டாஷியம் போன்ற கனிமங்களும் உள்ளது. அதிகமாக இருக்கும் இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர இது பெரிதும் உதவும். இதிலுள்ள பொட்டாஷியம் உங்களின் இதய ஆரோக்கியத்திற்கும் உதவிடும்.

ஓட்ஸ்

இதனை கிண்ணம் கிண்ணமாக உண்ண வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் காலையில் ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும், நிறைய மாற்றங்கள் தென்படும். அதனுடன் சுவைமணம் அடங்கிய வகைகளை தவிர்க்கவும். அதற்கு காரணம் அதில் தேவையற்ற சர்க்கரை அடங்கியிருக்கும். இது இரத்தத்தில் உள்ள உங்களது சர்க்கரை அளவை அதிகரித்து எதிர்மறை தாக்கங்களை தான் உண்டாக்கும்.

கொய்யாப்பழம்

இதில் பொட்டாஷியம் அதிகமாக உள்ளதால் இந்த பழமும் கூட நல்ல பலனை அளிக்கும். இதில் நார்ச்சத்தும் அடங்கியிருப்பதால், உங்கள் செரிமான அமைப்பிற்கும் உதவிடும். இரத்த கொதிப்பை குறைக்க உதவுவதோடு, உடல் எடை குறைப்பு போன்ற பிற பயன்களையும் அளிக்கிறது.

தயிர்

தயிரில் பொட்டாஷியம், மெக்னீசியம் மற்றும் கால்ஷியம் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. கொழுப்பின் அளவு குறைந்தால் இரத்த அழுத்தம் வெகுவாக குறையும்.

தக்காளி

பல்வேறு உடல் நன்மைகளுக்காக தக்காளி பயன்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள லைக்கோபீன். சர்க்கரை நோயை தடுப்பது முதல் சருமம் சீக்கிரமாக முதிர்ச்சி அடையும் பிரச்சனை வரை பல விஷயங்களுக்கு தக்காளி உதவுகிறது. தக்காளியை பதப்படுத்தாமல் அல்லது சமைக்காமல் அப்படியே உண்ணுவது கூடுதல் பயனாகும். மாறாக கொழுப்பு அடங்கியுள்ள சீஸ் மற்றும் இறைச்சி சேர்க்கப்பட்டுள்ள பீட்சாவுடன் எல்லாம் இதனை உண்ணக்கூடாது.

கீரை

கீரையும் கூட இரத்த கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கும். இதில் ஊட்டச்சத்து மிக அதிகமாக உள்ளதால் தான் நமக்கு இந்த பலனை கிடைக்கிறது. இதில் ஆண்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளதால் இயக்க உறுப்புகள் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை சீர் செய்யவும் உதவும்.

வெண்ணெய்ப்பழம்

பல வித கோணங்களில் இரத்த கொதிப்பை தாக்க உதவும் வெண்ணெய்ப்பழம். அதற்கு காரணம் அதிலுள்ள பொட்டாஷியம், ஃபைபர் மற்றும் மோனோ-சேச்சுரேட்டட் கொழுப்பு. இந்த மூன்றும் சேர்த்து இரத்த கொதிப்பை சமநிலையில் வைத்திட உதவும்.

காரட்

காரட் கண்களுக்கு நல்லது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் அவற்றில் ஆண்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் போட்டாஷியமும் கூட உள்ளது. இரத்த கொதிப்பை இயல்பான நிலையில் வைத்திட தேவைப்படும் மிக முக்கியமான இரண்டு பொருட்கள் இவைகள். காரட்டில் உள்ள குறிப்பிட்ட வகையான ஃபைபர் உங்களை சுத்தமாகவும் வைத்திருக்கும்.

கீரை

கீரையும் கூட இரத்த கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கும். இதில் ஊட்டச்சத்து மிக அதிகமாக உள்ளதால் தான் நமக்கு இந்த பலனை கிடைக்கிறது. இதில் ஆண்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளதால் இயக்க உறுப்புகள் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை சீர் செய்யவும் உதவும்.

கொழுப்பு நீக்கிய பால்

கொழுப்பு நீக்கிய பாலில் கொழுப்பில்லாமல் கால்ஷியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாஷியம் அடங்கியுள்ளது. உங்கள் உடலில் லாக்டோஸ் சகிப்புத் தன்மை இல்லையென்றாலும் அல்லது சைவ உணவை உன்னுபவராக இருந்தாலும், தினமும் கொழுப்பு நீக்கிய பாலை குடித்தால் இரத்த கொதிப்பு இயல்பு நிலையில் இருக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.

தர்பூசணி

தர்பூசணி என்பதை எவ்வளவு வேண்டுமானாலும் அனைவரும் உண்ணுவார்கள். அதுவும் அது நமக்கு அளிக்கும் நன்மைகளை தெரிந்தால் கேட்கவே வேண்டாம். இரத்த கொதிப்பு உயரும் போது, தர்பூசணியில் உள்ள எல்-சிற்றுல்லைன் அதற்கு உதவிடும். இது உங்கள் தமனிகளை அமைதியுறச் செய்யும். இதனால் இரத்த கொதிப்பின் அளவுகள் குறையும். அதனால் இந்த கோடைக்கால விருந்தை தவிர்க்காதீர்கள். தினமும் காலையில் பரங்கிப்பழம் போன்ற மற்ற மெலன் பழங்களுடன் தர்பூசணியை உட்கொள்வதை வழக்கமாகி கொள்ளுங்கள்.

கிஸ்மிஸ்

இதிலுள்ள பொட்டாஷியம் தான் இந்த மாயத்தை நிகழ்த்துகிறது. இது மிகவும் சுவை மிகுந்துள்ளதாக உள்ளதால் இதனை அளவுக்கு அதிகமாக உண்ண ஆரம்பித்து விடாதீர்கள்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்களில் உள்ள ஆண்டி-ஆக்சிடன்ட்கள் இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும். இதனை தினமும் மிக சிறிய அளவில் மட்டுமே உண்ணுங்கள். மாறாக அளவுக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இதனை அதிகமாக உட்கொள்வதால் இதனால் கிடைக்கும் பயன்கள் அதிகரிக்க போவதில்லை. அதனால் மிக குறைந்த அளவில் தினசரி அடிப்படையில், நீண்ட நாட்களுக்கு உட்கொள்ளலாம்.

வாழைப்பழம்

தினமும் இரண்டு வாழைப்பழங்களை உட்கொண்டால் இரத்த கொதிப்பின் மீது சிறந்த பயனை அளிக்கும். வாதம் போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றால் மூன்றாவது வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் வாதம் ஏற்படும் என்றால், இதனை கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.

நட்ஸ்

அவைகளில் பொட்டாஷியம் உள்ளது. அதனால் தான் என்னவோ மற்ற உணவுகளை போல் இதுவும் இரத்த கொதிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். ஆல்மண்ட் மற்றும் பிஸ்தா பருப்புகள் தான் சிறந்த தேர்வுகளாக இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக செல்ல கூடாது. அளவுக்கு அதிகமாக சென்றால், எதுவுமே நல்லதல்ல.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் C ஆண்டி-ஆக்சிடன்ட்டாக செயல்படும். உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி சளியை போக்க இது உதவுவதோடு, இரத்த கொதிப்பையும் குறைக்கும். இதனை ஜூஸாகவும் குடிக்கலாம் அல்லது அப்படியே கூட உண்ணலாம். ஆனால் அதை முழுவதுமாக நம்ப வேண்டியதில்லை.

Related posts

தெரிஞ்சிக்கங்க…துரியன் பழம்: சுகாதார நன்மைகள், ஊட்டச்சத்து, தோல் மற்றும் கூந்தலுக்கான பயன்பாடுகள்..!!!

nathan

தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், பெறும் நன்மைகள்..!!

nathan

சுவையான மட்டன் கீமா கட்லெட்

nathan

உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடிய பேரீச்சை !….

sangika

உங்களுக்கு தெரியுமா சீனர்களுக்கு வழுக்கை வராமல் இருக்க காரணம் அவர்கள் சாப்பிடும் இந்த காய்தானாம்!

nathan

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…

nathan

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்

nathan

வாயுத் தொல்லை, உடல் சூட்டை போக்க அருகம்புல் துவையல்….

sangika

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாதவைகள்!!!

nathan