31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

சிவப்பழகை பெற

* கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1
* உலர்ந்த திராட்சை பழம்-10
இவற்றை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பின்பு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

அழகான பாதத்திற்கு…

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பின்பு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணையை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். நகத்துக்கு டார்க் கலர் பாலீஷ் போடுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம். பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணையில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.

Related posts

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களைப் போக்குவது எப்படி?

nathan

முக மற்றும் கூந்தல் அழகை பெற நீங்கள் இவற்றை கட்டாயம் சாப்பிட்டாகனும்!!

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பருக்களை போக்குவதற்கான எளிய வழிமுறைகள்..!

nathan

முகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கணுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

nathan

பழவகை ஃபேஷியல்

nathan

ஜொலிக்கும் அழகு தரும் பலாப்பழ ஃபேஸ் பேக்

nathan

சூப்பர் டிப்ஸ்! முகத்தில் மருக்களா? இதை தடவினால் போதும்- ஐந்தே நாட்களில் தீர்வு

nathan

சில அழகு டிப்ஸ் !! அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு..

nathan

தெரிஞ்சிக்கங்க… தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா…?

nathan