28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
122untu
ஆரோக்கியம் குறிப்புகள்

கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு இந்த முறையில் செய்து பாருங்க

நலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும் பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்கையான வாழ்க்கையால் அவதி படுவதுதான் மிச்சம்.

உடல் எடையை குறைப்பதில் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தப்படும் பூண்டு எந்த அளவிற்கு உதவி செய்கிறது தெரியுமா ?

இந்த கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

 

தேவையான பொருள்கள்:

பூண்டு – 15 பல் (தோல் நீக்கப்பட்டது)
புழுங்கல் அரிசி – ஒரு கப் (வறுத்து, உடைத்தது)
சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் (உடைத்தது)
வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி அளவு
இந்துப்பு – தேவையான அளவு
மோர் – ஒரு கப்
தண்ணீர் – 4 கப்

செய்முறை:
உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து குடிக்கலாம். காலை, மாலை வேளைகளிலும் இதை சாப்பிடலாம்.

இதனை மதிய உணவில் நாம் இயல்பாகவே அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வோம். அதற்கு பதிலாக இந்த கஞ்சியைக் குடித்து வந்தால் பசியும் அடங்கும். குறைந்த கலோரியில் நிறைவான, சத்தான உணவைச் சாப்பிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் உடலில் அதிகரித்துள்ள கொழுப்பை ,அதிக அளவில் மெடபாலிசம் செய்து வெகுவாக குறைகிறது. அதுமட்டுமில்லாமல், ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது. புற்று நோய் வருவதை தடுகிறது. இது போன்ற பல நன்மைகள் இருக்கின்றது.

Related posts

சூப்பர் டிப்ஸ்..நெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம்…!!

nathan

சூப்பர் டிப்ஸ்! கண் பார்வையை அதிகரிக்க உதவும் சில இயற்கை குறிப்புகள்…!!

nathan

கர்ப்ப காலத்தில் வயிற்று சுருக்கங்கள் எதனால் ஏற்படுகிறது.

nathan

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எக்காரணம் கொண்டும் இந்த ராசிக்காரர்களை மட்டும் ரொம்ப நம்பாதீங்க….

nathan

கண்ணீரால் கரையும் தீமைகள்

nathan

வெண்புள்ளி உணவு முறை

nathan

தெரிஞ்சிக்கங்க…வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan