vinayak2
அழகு குறிப்புகள்

நடிகர் விநாயகன் சர்ச்சை பேச்சு! பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள விநாயகன், சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விநாயகன் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அப்போது அவர் கூறியதாவது, கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து கொள்வது தான் மீ டூ வா? எனவும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன்.

அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன், என்றார். விநாயகனின் இந்த பேட்டிக்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விநாயகன் கடந்த 2019-ம் ஆண்டு பெண்ணிய அமைப்பை சேர்ந்தவர்களை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்காக அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.- source: maalaimalar

Related posts

உங்கள் முகத்தில் வைக்கக் கூடாத 11 விஷயங்கள்

nathan

சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்க இத செய்யுங்கள்!…

sangika

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான ஃபேஷ் பேக்குகள்

nathan

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க மனைவி உங்களுக்கு உண்மையா இல்லை என்று உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா?

nathan

பாடகர் மலேசியா வாசுதேவ னின் மகனின் ம னைவி யார் தெரி யுமா.?

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்! இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்!….

sangika

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

nathan