15 1500121112 1
மருத்துவ குறிப்பு

உங்க காதலரை/ காதலியை எப்படி உங்கள் வசம் வைத்துக் கொள்வது என தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

காதல் நிலைத்திருக்க இன்னும் இன்னும் அன்பு செய்ய வைப்பது உங்கள் மீதான நம்பிக்கை தான். உங்களது உறவில் உங்கள் இணைக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்குள் காதல் நீடிக்கும். நானும் உண்மையாத்தான் இருக்கேன் நிறைய லவ் பண்றேன் நம்பிக்கை வரணும்னா.. நோ ஐடியா. எதவச்சு என் பாட்னர் என்கிட்ட உண்மையா இருக்கான்னு கண்டுபிடிக்கிறது என்று சிந்திக்கும் சிந்தைனையாளர்களுக்காக சில யோசனைகள்.

தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்
எல்லாரும் தவறு செய்கிறோம், ஆனால் அந்த எல்லாருமே தன் தவறை ஒப்புக் கொள்வதில்லை. நீங்கள் செய்யும் தவறை விட அதை மறைக்க நினைப்பது தான் மிகப்பெரிய தவறு. தவறை ஒப்புக் கொள்ளுங்கள். தவறை உணர்ந்து கொண்டு இனியும் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்கிற நம்பிக்கையை உங்கள் இணைக்கு கொடுங்கள்.

செய்வதை சொல்லுங்கள் :
இணையின் மனதில் அதிக ஆசையை வளர்க்க வேண்டாம்.உங்களால் முடிந்ததை சொல்லுங்கள் அதை நிறைவேற்றுங்கள். உங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் போனால் அதற்காக எத்தனை முயற்சி செய்தீர்கள் என்று உங்களது பிரயத்தனங்களை சொல்லுங்கள். ஆனால் அடிக்கடி பிரயத்தனங்களை சொன்னால் இருவருக்குமிடையே சண்டையின் போது ஹாட் டாப்பிக் இது தான்.

கவனித்தல் : இணையின் கருத்துக்களை அமைதியாக கவனியுங்கள். தன் மனதில் இருந்தவற்றை தன்னுடன் நெருக்கமான தனக்குப் பிடித்தமான ஒருவரிடம் சொல்லிவிட்டோம். என்ற ஆறுதலும் ஏதேனும் பிரச்சனை என்றால் அதை சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தும் போது தான் ஏற்படுகிறது.

ஆர்வம் : இணையின் மீது அவர்களது வேலைகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருப்பதாய் காட்டிக் கொள்ளுங்கள். ஆர்வத்துடன் கேள்வி கேளுங்கள் எதிர்மறையான கமெண்ட்ஸ் அளிக்காமல் உற்சாகப்படுத்தும் விதமாக பேசுங்கள். ஆர்வம் அதிகரித்து பொசசிவ்னெஸ்ஸாக மாறாமல் பார்த்துக்கொள்வது நன்று.

சுயமாக இருங்கள் : இது காதலில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு கை கொடுக்கும். உங்களது வார்த்தைகளை விட உங்களது செயல்கள் நிறைய விஷயங்களை உணர்த்தும் என்பதால் உங்களை எப்போதும் பாசிட்டிவ் நபராக வைத்துக் கொள்ளுங்கள்

நேர மேலாண்மை : இரவை பகலாக்கி போன் பேசிக் கொண்டிருப்பது நேர மேலாண்மை அல்ல. உன்னிடம் இரவு முழுவதும் பேசுகிறேன் என்று சொல்வதும் அறிவார்ந்த விஷயம் அல்ல. உங்களுக்கான நேரம்,அலுவல் நேரம், இணைக்கான நேரம் என திட்டமிட்டு நேரத்தை ஒதுக்குங்கள்

வெளிப்படையாக இருங்கள் : உங்களுக்கு என்ன தேவை? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக பேசுங்கள்,கேளுங்கள். இணையின் செயலால் நீங்கள் காயப்பட்டிருந்தால் அதையும் வெளியில் சொல்லிவிடுங்கள். எதுவும் வெளியில் சொல்லாமல் இருப்பது இணை மீதான நம்பிக்கை குறைய வைக்கும். அதே நேரத்தில் வெறுப்பும் அதிகரிக்கும். மனதில் இருப்பதை அறிந்து இணை செயல்பட வேண்டும் என்று நீங்கள் விரும்ப ஆரம்பித்து அது பொய்க்கும் போது காதலில் அது விரிசலையே ஏற்படுத்தும்.

Related posts

குழந்தை கொடி சுற்றி பிறந்தால் மாமனுக்கு ஆகாதா? உண்மை என்ன?

nathan

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்பமானால் வரும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்!

nathan

திருமண வாழ்க்கையை குழப்பும் உறவுகளின் தலையீடு -தெரிந்துகொள்வோமா?

nathan

உறவு சார்ந்த பிரச்சினைகளில் பெண்ணையே குறிவைத்து தாக்குவது ஏன்?

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் இரத்த சுழற்சி குறைவாக இருக்குனு அர்த்தம்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… புதிதாக பிறந்த குழந்தைகள் பற்றிய 10 ஆச்சரியமான விஷயங்கள்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றித் தெரியுமா?

nathan

வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

அவசியம் படிக்க..இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்…

nathan