26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
435 1 8eff6524ac17a6d82b9312de6ca32232
ஆரோக்கிய உணவு

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 பொருட்கள் -தெரிஞ்சிக்கங்க…

நீங்கள் தினமும் வெளியில் சாப்பிடுபவர்களா? அல்லது ஒரே இடத்தில் அமர்ந்து மனஅழுத்தம் நிறைந்த வேலை செய்பவரா நீங்கள்?

அப்படியெனில் உங்கள் இதயம் ஆபத்தில் உள்ளதை நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள். மனித உடலுக்கு போதுமான இயக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. அப்பொழுது தான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமான இருக்கும்.

இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் ஆகியவை மனித உடலில் மிக முக்கிய உறுப்புகள். இந்த உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு, மூளையில் ஏற்படும் சிறிய அடைப்பு மனித உடலில் வாதத்தை ஏற்படுத்தி உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் நிறுத்திவிடும்.

435 1 8eff6524ac17a6d82b9312de6ca32232அல்லது மூளையை செயலிழக்க செய்துவிடும். அதேபோல் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் சிறிது குறைந்தாலும் இதய நோய்கள் அல்லது மாரடைப்பு ஏற்படும். எனவே, இது போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உடல் இயக்கமும் முக்கியம்.

எப்படியிருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமன், மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றால் இரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது கொழுப்பு போன்றவை சேர்ந்து இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

எனவே, இரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை இயற்கையான முறையில் போக்குவதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும்

435 2 e32e059b599ed24af64f118c060bd749தேவையானப் பொருட்கள்

பசலைக் கீரை ஜூஸ் – 1/2 டம்ளர்

வறுத்த ஆளி விதை – 1 டேபிள் ஸ்பூன்.

435 3 77c9d7194239e00bbbd6117604627cf4ஜூஸ் செய்முறை

ஒரு டம்ளர் பசலைக் கீரையுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதை சேர்க்க வேண்டும். நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குறைந்தது 2 மாதத்திற்கு குடிக்கவேண்டும்.

435 4 9d6398c62a98017e60ba3d264eab98ffகொழுப்பை கரைக்கும்

இந்த ஜூஸை தினமும் குடித்து வரும் போது இயற்கையான முறையில் இதய இரத்தக் குழாயிகளை சுத்தம் செய்து, இதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இந்த ஜூஸை குடிக்கும் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் பருமன் அதிகரிக்காமல் தடுத்து உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

435 5 20f9a40d8dca06ecfd9c2a71ae2454b7ரத்தத்தை சுத்தமாக்கும் :

பசலைக் கீரையில் புரதச்சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை அதிக அளவில் உள்ளது.

பசலைக் கீரை உடலில் ஆரோக்கியமான இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ஆளி விதையில் நார்ச்சத்துக்களும், வைட்டமின் ஈ இரண்டுமே இரத்தக் குழாய்களில் சேர்ந்திருக்கக்கூடிய அசுத்தங்களை அகற்றி, இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

Related posts

தேங்காய் பால் சூப்!

nathan

பொரிப்பதற்கு எந்த எண்ணெய் சிறந்தது என தெரியுமா? இத படிங்க

nathan

உங்களுக்கு தெரியுமா நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள இந்த பொருள் போதும்..!

nathan

இட்லி சாப்பிடுங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…

nathan

சூப்பரான புத்துணர்ச்சியூட்டும் ஆப்பிள் டீ

nathan

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

nathan

வெப்பம் தவிர்த்து குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரை

nathan

மருத்துவ பயன்கள் நிறைந்த அரைக்கீரை!!

nathan