26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
25 1432543710 14 1400050732 kashmiri
சைவம்

சுலபமான.. வெஜிடேபிள் பிரியாணி

வெஜிடேபிள் பிரியாணியை பேச்சுலர்கள் கூட செய்யலாம். சரி, இப்போது வெஜிடேபிள் பிரியாணியை சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்…


25 1432543710 14 1400050732 kashmiri
தேவையானப் பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (முழுதாக)
புளித்த தயிர் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
புதினா – 1/2 கப்
கொத்தமல்லி – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
கேரட் – 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 (சற்று பெரிதாக நறுக்கியது)
பட்டாணி – 1/2 கப்

தாளிப்பதற்கு…

பட்டை – 1
கிராம்பு – 3
ஏலக்காய் – 4
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும்.

பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய வைத்து பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, அத்துடன் வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு, நறுக்கிய காய்கறிகளை அத்துடன் சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும். காய்கறி நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, தயிர், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் அதில் சேர்க்க வேண்டும். பின்னர், குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது சுவையான வெஜிடேபிள் பிரியாணி தயார்….

Related posts

சத்தான பாலக் சப்பாத்தி

nathan

சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய்

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் உருளைக்கிழங்கு குருமா

nathan

ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல்

nathan

குழந்தைகளுக்கான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன்

nathan

சத்து நிறைந்த முருங்கை கீரை – வாழைத்தண்டு பொரியல்

nathan

பச்சைப்பயறு வறுவல்

nathan

வெண்டைக்காய் வத்தக்குழம்பு

nathan