32.2 C
Chennai
Monday, May 20, 2024
paneer masala 14 1468499896 1
சைவம்

பன்னீர் பட்டாணி மசாலா

தினமும் இரவில் உங்கள் வீட்டில் சப்பாத்தியா? என்ன சைடு-டிஷ் செய்வதென்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் இன்று பன்னீர் பட்டாணி மசாலா செய்யுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த பன்னீர் பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பன்னீர் – 1 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)
பச்சை பட்டாணி – 1 கப்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பால் – 1 கப்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் வைத்து, பின் நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டையைப் போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் அனைத்து மசாலா பொடியையும் சேர்த்து கிளறி, தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்க வேண்டும். பிறகு அந்த கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். பின் குடைமிளகாய், பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். காய்கறிகள் வெந்ததும், பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, பால் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி தூவினால், பன்னீர் பட்டாணி மசாலா ரெடி!

paneer masala 14 1468499896

Related posts

சீரகக் குழம்பு!

nathan

தேங்காய்ப்பால் குழம்பு,சமையல்,TamilCook, Indian Cooking Recipes in Tamil and English

nathan

சத்தான வெங்காய – மிளகு சாதம் செய்வது எப்படி

nathan

சிம்பிளான… தக்காளி சாம்பார்

nathan

சுவையான கடலைப்பருப்பு தேங்காய் குழம்பு

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan

செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல்

nathan

உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி

nathan

கொத்தவரங்காய் பொரியல்

nathan