25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
irunelveli sodhi recipe
ஆரோக்கிய உணவு

சுவையான திருநெல்வேலி சொதி

பொதுவாக புதுமண தம்பதியர்களுக்கு திருநெல்வேலி ஜில்லாவில் செய்து கொடுக்கப்படும் பிரபலமான ஒரு ரெசிபி தான் சொதி. இது மிகவும் வித்தியாசமான சுவையுடன் தேங்காய் பால் மற்றும் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யப்படும். சொல்லப்போனால் இது ஒரு ஆரோக்கியமான சமையல் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் காய்கறிகளை அதிகம் சேர்த்து செய்வதால், இதில் சத்துக்கள் அதிகம் இருக்கும்.

சரி, இப்போது திருநெல்வேலி சொதி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Tirunelveli Sodhi Recipe
தேவையான பொருட்கள்:

கேரட் – 1
உருளைக்கிழங்கு – 1
பீன்ஸ் – 10
பச்சை பட்டாணி – 1/4 கப்
கத்திரிக்காய் – 2
முருங்கைக்காய் – 1
வெங்காயம் – 2
இஞ்சி – 2 இன்ச்
பூண்டு – 5 பற்கள்
பச்சை மிளகாய் – 5
தேங்காய் – 1/2 மூடி (துருவியது)
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அனைத்து காய்கறிகளையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து அரைத்து, 1 கப் தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, 1 கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் இஞ்சி, பூண்டு, வெந்தயம் சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி, மிஞ்சுள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, இரண்டாவது தேங்காய் பாலை ஊற்றி, 10 நிமிடம் காய்கறிகளை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின் வதக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை பேஸ்ட் சேர்த்து, தீயை குறைத்து, முதல் தேங்காய் பாலை ஊற்றி, 1-2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதனை இறக்கி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்தால், திருநெல்வேலி சொதி ரெடி!!!

Related posts

தெரிஞ்சிக்கங்க…புரோட்டா பிரியரா? அப்போ இந்த பிரச்சினை உங்களுக்கு வரலாம்? அறிவியல் விளக்கம்

nathan

தெரிஞ்சிக்கங்க…வெறும் வயிற்றில். வெந்தயம் ஊற வைத்த நீரை குடியுங்க. எந்த நோயுமே அண்டாது.!!!

nathan

உங்களுக்கு தெரியுமா கிராம்பின் மருத்துவ நன்மைகள்?

nathan

வாங்க தெரிஞ்சுக்கலாம்..!பெண்களுக்கான சில சமையல் டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு கேடு விளைவிக்க கூடிய ஆரோக்கிய உணவுகள்

nathan

பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?

nathan

வாரத்திற்கு நான்கு நாள் முந்திரி சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் எடையை குறைக்க உதவும் சோயா பீன்ஸ் கூட்டு

nathan

இரத்தசோகை போக்கும் ராஜ்மா

nathan