23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.0.560.350.160 1
முகப் பராமரிப்பு

முகத்தில் சீழ் நிறைந்த பருக்களா? அப்ப தினமும் செய்யுங்க…

சிலர் முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வந்துவிட்டால் அதை கைவிரலால் தொட்டு பிய்த்து எறிந்துவிடுவார்கள். இப்படி செய்தால், பருக்கள் ஓரிடத்தில் இருந்து பரவ ஆரம்பித்து, பின் முகம் முழுவதும் பரவி, முகத்தின் அழகையே பாழாக்கிவிடும்.

இத்தகைய வலிமிக்க மற்றும் அசிங்கமான சீழ் நிறைந்த பருக்களைப் போக்க சீழ் உதவும் சில எளிய ஆயுர்வேத சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.

மஞ்சள்

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியிருப்பதால் இவை சீழ் நிறைந்த பருக்களைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

4 டீஸ்பூன் மஞ்சள் தூளை லேசாக வறுத்து அதில் சிறிதளவு நீர் சேர்த்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவி, நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.625.0.560.350.160.300.05

பாகற்காய்

பாகற்காயை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை பருக்களின் மீது வைத்து வந்தால், பருக்கள் சீக்கிரம் குணமாகிவிடும்.

ஆனால் பாகற்காய் சாற்றினை சீழ் நிறைந்த பருக்கள் இருக்கும் போது 1/4 டம்ளர் குடித்து வந்தால், பருக்கள் சரியாவதோடு, இனிமேல் வராமலும் இருக்கும்.

 

மஞ்சள் நீர்

ஒரு நாளைக்கு 3 முறை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சீழ் நிறைந்த பருக்கள் சீக்கிரம் குணமாவதோடு, இனிமேல் வராமலும் இருக்கும்.

சீரகம்

4 டீஸ்பூன் சீரகப் பொடியை லேசாக வறுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவினால் பருக்களினுள் உள்ள சீழ் விரைவில் வெளியேறி, சீக்கிரம் சரியாகிவிடும்.

 

பூண்டு

பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளதால், உணவிலும் பூண்டுகளை சேர்த்து வருவதன் மூலமும் சீழ் நிறைந்த பருக்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

2 பல் பூண்டை பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், மிகவும் வேகமாக பருக்கள் மறையும்.

வெங்காயம்

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவினால் பருக்களை விரைவில் காணாமல் போகச் செய்யும்.

 

விளக்கெண்ணெய்

தினமும் 5 துளிகள் விளக்கெண்ணெயை காட்டன் உதவியுடன் பருக்களின் மீது வைத்து, பேண்டேஜ் கொண்டு அந்த பகுதியில் இறுக்கமாக ஒட்டினால் சீழ் நிறைந்த பருக்கள் பலவீனமாகி, சீழ் முழுமையாக வெளியே வந்துவிடும்.

வெற்றிலை

இரண்டு வெற்றிலையை சிறு துண்டுகளாக வெட்டி அதை சிறிது நேரம் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்த பின், அந்த இலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவி துணி கொண்டு கட்டிவிடுங்கள்.625.0.560.350.160 1

Related posts

உங்க முகம் பிரகாசமா ஜொலிக்க… ‘இத’ செஞ்சா போதுமாம்…!

nathan

முகத்தில் உள்ள முடிகளை நீக்க

nathan

முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும் சமையலறைப் பொருட்கள்

nathan

முகப் பொலிவுக்கு உதவும் நைட் க்ரீம்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா இதுல ஒன்ன தினமும் நைட் செஞ்சா, சீக்கிரம் வெள்ளையாவீங்க… தெரியுமா!!!

nathan

முகத்தில் வழியும் எண்ணெய்யை போக்க சில வழிகள்

nathan

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…தெரிந்துகொள்வோமா?

nathan

முகத்தில் உள்ள குழிகளை மறைக்க இயற்கை வழிகள்

nathan

இந்த தழும்புகளை எப்படி சரிசெய்யலாம்? வெறும் உப்பு தண்ணியே போதும்!…..

nathan