சீனி என்றால் யாருக்கும் கசக்கவா செய்யும், அந்தளவுக்கு வெள்ளை சர்க்கரை பிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அது கசப்பான மற்றும் அதிர்ச்சிகரமான உண்மைகள் மறைந்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
ஆம் வெள்ளை சர்க்கரையை தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் போது பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
காரணம் அதில் கலக்கப்படும் ரசாயனங்கள், முதலில் இந்த சர்க்கரை எப்படி தயாராகிறது என தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளை சர்க்கரை எப்படி தயாராகிறது?
கரும்பிலிருந்து சாறு பிழியும் போது பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது, பிழிந்த சாறில் லிட்டருக்கு 200 மிலி வீதம் பாஸ்போரிக் அமிலம் கலந்து, 70 சென்டிகிரேட் அளவு சூடாக்கப்படுகிறது.
இந்த அமிலம் அழுக்கு நீக்கியாக பயன்படுகிறது, பின் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து சல்பர் டை ஆக்சைடு செலுத்துகின்றனர்
இதை கொதிகலனில் அதிக வெப்பநிலையில் சூடாக்கும் போது, மண், சக்கை போன்ற கசடுகள் பிரிந்து, தெளிந்த கரும்பு சாறு கிடைக்கிறது, ஆனால் அது சத்துக்களை இழந்துவிடுகிறது.