29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1cde07b057
மருத்துவ குறிப்பு

டான்சிலுக்கு ஆபரேஷன் அவசியமா?தெரிஞ்சிக்கங்க…

டாக்டர் எனக்கொரு டவுட்டு

என் மகளுக்கு அடிக்கடி தொண்டையில் புண் வருகிறது. இது டான்சில் கட்டியாக இருக்குமா? அறுவை சிகிச்சை அவசியமா? அறுவை சிகிச்சை செய்வதால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

ஐயம் தீர்க்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பிரனேஷ்…

”டான்சில்ஸ் என்பது தொண்டையில் உள்ள இரு திசுக்களே. டான்சில், அடினாய்டு என்பவை நிணநீர் தொகுப்பு. இவை நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குகின்றன. உடலுக்குள் பாக்டீரியா, வைரஸ் நோய்க்கிருமிகள் நுழையாமல் படை வீரர்களைப் போல பாதுகாக்கின்றன. சில நேரங்களில் இந்த இரண்டு திசுக்களுமே தொற்று நோயினால் தாக்கப்பட்டு வீக்கம் ஏற்படுவதையே டான்சிலிட்டிஸ் என்கிறோம்.

டான்சிலிட்டிஸ் என்பது எந்த வயதிலும் வரலாம். பெரும்பாலும் குழந்தைகளே பாதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், உணவை விழுங்குவதில் சிரமம், தூக்கமின்மை, தொண்டை வலி, காது வலி, காது அடைப்பு, தொண்டையில் சீழ் வடிதல், குறட்டை விடுதல் மற்றும் வாயில் துர்நாற்றம் போன்றவை இதற்கான அறிகுறிகள். அழற்சி நீங்கிய பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும்.

அடிக்கடி தொண்டை வலி, காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கூடியவரை மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்ய முயற்சி செய்வோம். மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாமல் டான்சில் வீங்கி காய்ச்சல் வரும் நிலையில்தான் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கிறோம். இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் அறுவை சிகிச்சையில் மிகமிக அரிதாகவே பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். கவலை வேண்டாம்.டான்சில் வீக்கத்துக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான முறையில் சிகிச்சை பெறாவிட்டால் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் எடை குறைவது உள்பட அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.”

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் மறைந்துபோகுமாம்?

nathan

தெரிஞ்சிக்கங்க…குடும்பப் பிரச்சினைகளை கையாள உதவும் சில வழிமுறைகள்

nathan

மருதாணி மகத்துவம்!

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தய டீ ….

sangika

மருத்துவர்களின் எச்சரிக்கை! சி.டி ஸ்கேன் வேண்டாம்! இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமா?

nathan

கொய்யா…இதெல்லாம் மெய்யா?!

nathan

சைலன்ட் மாரடைப்பு என்றால் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோயை குணமாக்கக்கூடிய இயற்கை மருத்துவம்!!!

nathan

எவ்வளவு உடம்பு வலி இருந்தாலும் இந்த இலை துவையல் அரைச்சு சாப்பிடுங்க !

nathan