24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
202111061
சமையல் குறிப்புகள்

சுவையான வெஜ் கீமா

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 4 (பொடிதாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடிதாக நறுக்கியது)
தக்காளி – 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
குடைமிளகாய் – 1
கேரட் – 1
பீன்ஸ் – 50 கிராம்
ஊறவைத்த பச்சைப் பட்டாணி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 1
கறி மசாலாப் பொடி – 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ½ தேக்கரண்டி
தனியா தூள் – ½ தேக்கரண்டி
சீரகத் தூள் – ½ தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
துருவிய பன்னீர் – 100 கிராம்
துருவிய வெண்ணெய் – 2 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு – ½ தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில், அடி கனமான வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, குடை மிளகாய், பட்டாணி, பச்சை மிளகாய், அரைத்த தக்காளி விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

2 நிமிடங்கள் கழித்து மிளகாய்த் தூள், சீரகத்தூள், கறி மசாலாத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். பின்பு சிறிது தண்ணீர் ஊற்றிக் கலந்து கேரட், பீன்ஸ், துருவிய பன்னீர் சேர்த்து வதக்கவும். 2 நிமிடங்களுக்குப் பிறகு சிறிதளவு துருவிய வெண்ணெய்யை அதில் சேர்க்கவும்.

இந்தக் கலவையை நன்றாகக் கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். பின்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் மீதம் இருந்த துருவிய வெண்ணெயை மேலே தூவி எலுமிச்சம் பழச்சாறை ஊற்றவும்.

கடைசியாக கொத்தமல்லி தழையை மேலே தூவி இறக்கவும்.

சுவையான வெஜ் கீமா தயார். இதனை சப்பாத்தி, தோசை, அடையுடன் சேர்த்துப் பரி மாறலாம்.Courtesy: MaalaiMalar

Related posts

சுவையான சாஃப்ட் சப்பாத்தி

nathan

முருங்கைக்கீரை முட்டை பொரியல்….! பத்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்

nathan

வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் டீ பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது….

sangika

பீர்க்கங்காய் பொரியல்

nathan

சுவையான கொள்ளு உருண்டைக் குழம்பு

nathan

எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட்

nathan

சுவையான மலபார் அவியல்

nathan

சுவையான… தட்டைப்பயறு குழம்பு

nathan

சூப்பரான கும்பகோணம் கடப்பா சாம்பார்

nathan