தொப்புளில் பொதுவாக எண்ணெய் விட்டு தூங்குவதால், உடலுக்கு பலவிதமான நன்மைகள் தருகிறது.
உடலின், நச்சுக்கள், அழுக்குக்கள் வெளியேறி உடல் குளிர்ச்சியடைகிறது. இப்பதிவில் தேனை தொப்புளில் தடவிக்கொண்டு படுத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
உடலில் அஜீரணக் கோளாறு பிரச்சினை உள்ளவர்கள் அரை ஸ்பூன் இஞ்சி சாற்றுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து அதை இரவு தூங்கும்போது தொப்புளில் வைத்துக் கொண்டு படுத்தால் ஜீரண சக்தி மேம்படும்.
தினமும் தொப்புளில் சில துளிகள் தேன் தடவிக் கொண்டால் வயிறு வலி போன்ற பிரச்சினைகள் குறையும்.
மேலும், மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்கள் தினமும் இரவு தூங்கும்போது தொப்புளில் தேன் தடவிக் கொண்டு படுக்க அந்த பிரச்சினை தீரும்.
இதுமட்டுமின்றி, தேன் தொப்புளில் தடவினால் ஆன்டி- ஆக்சிடண்ட் மற்றும் நீர்ச்சத்துக்கள் முகத்துக்குப் பொலிவைத் தரும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை முயற்சி செய்யலாம். அடிக்கடி பருக்கள் ஏற்படும் பிரச்சினை உள்ளவர்களும் தொப்புளில் எண்ணெய் விட்டு தூங்கலாம்.