28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 62080e89
ஆரோக்கிய உணவு

கொத்தமல்லியை நீரிழிவு நோயாளிகள் பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும்!

தமிழர்களின் உணவுகளில் காய்கறிகளுடன் பச்சை கொத்தமல்லி சேர்ப்பது ஒரு பாரம்பரியம்.

கொத்தமல்லி காய்கறியின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதன் தோற்றத்தையும் சிறப்பு செய்கிறது.

பச்சை கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, சி, கே, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

கொத்தமல்லியை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இன்று பார்ப்போம்.

கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
கொத்தமல்லி இலைகளில் போதுமான அளவு ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இருப்பதால் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.
கொத்தமல்லியை உட்கொள்வதன் மூலம், செரிமான அமைப்பில் ஏற்படும் பிறச்சனைகள் மற்றும் குடல் நோய் போன்றவை சரியாகிவிடும்.
கொத்தமல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தைத் தடுக்கின்றன.
கொத்தமல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.
கொத்தமல்லியை உட்கொள்வதால், உடலில் இருந்து தேவையில்லாத கூடுதல் சோடியம் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இதன் காரணமாக உடல் உள்ளிருந்து கட்டுக்கோப்பாக இருக்கும்.
கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதன் நுகர்வு உதவுகிறது.
கொத்துமல்லி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் குணங்களை கொண்டு உள்ளதால், நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கொத்தமல்லியில் உள்ள பண்புகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை நீக்கி, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த அற்புத காயை வைத்தே நீரிழிவு நோயை விரட்டியடிக்கலாம்!

nathan

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சேர்க்க – தவிர்க்க வேண்டியவை

nathan

உடல் எடையை தாறுமாறாக குறைக்கும் பச்சை மிளகாய்! தெரிஞ்சிக்கங்க…

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… ப்ராக்கோலி சூப்

nathan

சத்தான டிபன் கேழ்வரகு பணியாரம்

nathan

சிப்ஸ் சுவைக்கத் தூண்டும்தான்… ஆனால், உடல்நலம்?!’ மருத்துவம் விவரிக்கும் உண்மை

nathan

உடலுக்கு குளுமை தரும் அரைக்கீரை

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க உதவும் கோடைக்கால பழங்கள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்!!

nathan