26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 1500624237 3
மருத்துவ குறிப்பு

தைராய்டு பிரச்சனை வராமல் இருக்கணுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

நம் உடலின் மிக அடிப்படையான சுரப்பி என்றே சொல்லலாம். இச்சுரப்பியில் ஏதாவது கோளாறு ஏற்ப்பட்டால் அது ஹார்மோன் ரீதியாக பாதிப்புகளை உண்டாக்கும்.

இரண்டு வகை :
தைராய்டு பிரச்சனைகளில் இரண்டு வகை இருக்கிறது.
1.ஹைபர்தைராய்டு
2.ஹைப்போ தைராய்டு
தைராய்டு சுரப்பி சரியான அளவில் சுரக்க வேண்டும். அதிகமாக சுரந்தால் ஹைபர் என்றும், குறைவாக சுரந்தால் ஹைப்போ தைராய்டு என்றும் சொல்லப்படுகிறது.
ஹைப்பர் தைராய்டு இருப்பவர்களுக்கு உடல் எடை குறைவது,அதீத சோர்வு, தூக்கமின்மை, அதிக சூட்டை உணர முடியாமை போன்றவை ஏற்படும்.
தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பவர்களுக்கு மன அழுத்தம்,தசை வலி, உடல் எடை அதிகரிப்பது போன்றவை ஏற்படும்.
இவற்றை தவிர்க்க சில எளிய டிப்ஸ்.,

டயட் : இரத்தத்தில் சர்க்கையளவு குறைவது, இன்ஸுலின் சுரப்பியில் மாற்றம் ஏற்படுவது என்பது நம் உடலில் நோய்த்தொற்று ஏற்பட காரணமாகிடும். தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். இதனை தவிர்க்க கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பாக்கெட் உணவுகள், அரிசி,மாவுச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து காய்கறி, பழங்கள், நட்ஸ் அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

காரணம் : தைராய்டு ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று நல்ல கொழுப்புக்களை எடுக்காமல் தவிர்ப்பது. இந்த கொழுப்பு என்பது நம் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட்களை எனர்ஜிகளாக மாற்றக்கூடியது. நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்காத பட்சத்தில் அட்ரினல் சுரப்பி அதீத நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதிக வேலை கொடுக்க கொடுக்க தைராய்டு சுரப்பியின் செயல்திறன் குறையத்துவங்கும். உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம்: சோர்வுடன் இருக்கும் போது உங்களது அட்ரீனல் மற்றும் தைராய்டு சுரப்பி உங்களது ஹார்மோன்களை பேலன்ஸ் செய்ய அதிக நேரம் வேலை செய்ய நேரிடும். இதுவும் தைராய்டு சுரப்பியின் செயல்திறனை பாதிக்கும். இதனை தவிர்க்க, எப்போதும் கவலைப்படுவதை தவிர்த்திடுங்கள். உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

க்ளூடன் தவிர்க்க : க்ளூடன் மற்றும் ஏ1 கேசின் ஆகியவை செரிமான பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது, உறுப்புகளை பாதிப்பது போன்றவை ஏற்படுத்தும். இவற்றை தொடர்ந்து உண்பதால் இரண்டு வகையான தைராய்டு வருவதற்கும் காரணம் உண்டென்பதால் ப்ரோட்டீன் அதிகமிருக்கும் உணவுகளை தவிர்த்திடுங்கள். பிரட்,பாஸ்தா,ஓட்ஸ்,கோதுமை,சீஸ் போன்ற உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்த்தல் நலம்.

21 1500624237 3

Related posts

பல்லையும் எலும்பையும் பாதிக்கும் பானம் இதுதான் எச்சரிக்கையா இருந்துக்கோங்க ..!!

nathan

குழந்தையை விடுதியில் சேர்த்து படிக்க வைக்கலாமா?

nathan

வெற்றிக்கான வழிகளை அறிந்து கொள்வது எப்படி

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் காலையில தண்ணீர் குடிச்சா இத்தனை நன்மைகளா?

nathan

தெரிஞ்சிக்கங்க…கை கழுவுவதற்கு சிறந்த சானிடைசரை தேர்வு செய்வது எப்படி?

nathan

முதுகுத்தண்டு முத்திரை விரல்கள் செய்யும் விந்தை!

nathan

தும்மலால் மிகுந்த அவஸ்தைப்படுகிறீர்களா? அதை உடனடியாக நிறுத்த இதோ சில வழிகள்!!!

nathan

இந்த பூவ நாம கண்டுக்கவே இல்ல… ஆனா இதுக்குள்ள என்னென்ன அற்புதமெல்லாம் இருக்கு தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் இப்படித்தான் தயாராகிறது…

nathan