25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
09 1441777578
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்கள் செய்யும் இந்த விஷயங்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் செய்ய முடியாது!!தெரிஞ்சிக்கங்க…

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற கருத்து உண்மையானது தான். ஆனால், பெண்கள் செய்யும் சில செயல்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் கூட செய்ய முடியாது. ஆம், இன்றைய 21ஆம் நூற்றாண்டில் ஆண்கள் செய்யும் பலவற்ற பெண்கள் செய்து வருகிறார்கள். கணினி பொறியியல் மட்டுமின்றி மெக்கானிக்கல், சிவில் என எல்லா துறையிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள்.

 

முடி திருத்தம், ஆடை, காலணி வரை ஆண்களின் சாயல் பெண்களில் தெரிய ஆரம்பித்துவிட்டது. ஆனால், இதே 21ஆம் நூற்றாண்டில் பெண்கள் செய்யும் செயல்களை ஆண்கள் செய்ய முடியுமா என்றால்? சத்தியாமாக முடியாது. குறிப்பாக ஓர் ஆறு செயல்களை ஆண்கள் கண்டிப்பாக செய்யவே முடியாது.

 

அப்படி மீறியும் ஆண்கள் செய்தாலும் கூட, இந்த சமூகம் அதை வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் தான் பார்க்கும்….

குட்டை பாவாடை, தொப்புள் தெரியும் மேல் சட்டை

ஆண்கள் அணியும், பேண்டில் இருந்து, டி-ஷர்ட் வரை பெண்கள் அணிகிறார்கள். லுங்கியை கூட விட்டி வைக்கவில்லை என்பது வேறு கதை. ஆனால், பெண்கள் அணியும் ஏதேனும் ஒரு உடையையாவது ஆண்கள் ஆல்ட்டர் செய்து ஃபேஷன் என்ற பெயரில் அணிய முடியுமா? அப்படி நீங்கள் வீம்புக்கு அணிந்தாலும், இந்த சமுதாயம் உங்களை வேறு பெயர் சொல்லி தான் அழைக்குமே தவிர, ஒரு போதும் நீங்கள் அவ்வாறான உடையை அணிய முடியாது.

ஹை-ஹீல்ஸ்

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக ஹை-ஹீல்ஸ் அணிந்தது ஆண்கள் தான் என்ற வரலாறு இருந்தாலும். இப்போதைய நிலைமையில், தமிழகத்தில் பெண்கள் அணிவது போல ஆண்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து செல்ல முடியுமா? ஆனால், செருப்பு அளவில் கூட ஆண்கள் அணியும் மாடலில் பெண்களுக்கும் செருப்புகள் விற்கப்படுகிறது. (உண்மையில் 33% பெண்களுக்கா?? ஆண்களுக்கா??)

மனநிலை மாற்றம்

பெண்களை போல நொடிக்கு நொடி மனநிலையை மாற்ற ஆண்களால் முடியாது. அப்போது தான் ஒரு தோழியை பற்றி மற்றவரிடம் கடுப்பாக பேசிக்கொண்டிருப்பார்கள், ஆனால, அடுத்த நொடி அந்த தோழி கண்முன் தோன்றினால் கூட உடனே புன்னகை செய்து பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், இது ஆண்களால் முடியாத காரியம்.

மேக்-அப்

கொப்பரானே சத்தியமா…. ஆண்களால் இது முடியவே முடியாது!!! ரோஸ் பவுடர், கண்மை, லிப்ஸ்டிக் எல்லாம் பூசிக்கொண்டு ஆண் வெளியில் செல்ல முடியும் என்ற எண்ணமே மனதில் எழுவது கடினம். பிறகு எங்கே முயற்சி செய்வது.

நீண்ட கூந்தல் வளர்ப்பது

நமது முன்னோர்கள் நீண்ட கூந்தல் வளர்த்தவர்கள் தான். பெண்களுக்கு இணையாக ஆண்களும் குடுமி போட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டில் “ஷார்ட் கட்” செய்த பெண்களை கூட அதிகம் பார்க்க முடியும் ஆனால், ஆறடி கூந்தல் கொண்டுள்ள ஆண்களை பார்க்கவே முடியாது.

கேள்வி மேல் கேள்வி கேட்டு தொல்லை செய்வது

நீங்கள் பெண்களுடன் எங்காவது தனியாக பயணம் மேற்கொண்டிருந்தால் மட்டுமே இதை உணர முடியும். மேப் கையில் இருந்தாலும் கூட, எப்படி போக வேண்டும், வேறு வழி இருக்கிறதா, பாதை சுலபமாக இருக்குமா? என கேள்வியே கண்ணீர்விடும் அளவிற்கு கேள்வி கேட்க பெண்களால் மட்டுமே முடியும். தெரியாது என்று தெரிந்தால் அவமானம் என்ற கெத்துக்காக கூட ஆண்கள் அதிகம் கேள்வி கேட்கமாட்டார்கள் என்பது வேறு விஷயம்.

Related posts

யோகாவில் அசத்தி வரும் ஷில்பா ஷெட்டி இவருக்கு வயது 44 ஆகும்

nathan

உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’

nathan

ஏராளமான நன்மைகள்! வெறும் வயிற்றில் தண்ணீருடன் இதனை கலந்து குடித்து பாருங்கள்!

nathan

இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…

nathan

உங்களுக்கு பனிக்காலங்களில் ஏற்படும் வறட்டு இருமலை போக்க வேண்டுமா?

nathan

இந்த 5 ராசிக்காரங்கள நம்பி எவ்வளவு வேணாலும் பணம் கொடுக்கலாமாம்…

nathan

உறவில் விரிசல் களைய வேண்டிய பத்து காரணங்கள்!

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகள் திக்கி திக்கி பேச இவையெல்லாம் தான் காரணமாம்..

nathan

பேன் தொல்லையா?

nathan