29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201705120834414959 Cough problem in summer SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

கோடை காலத்தில் ஏற்படும் இருமல் பாதிப்பு -இதோ எளிய நிவாரணம்

இருமல் குளிர் காலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. கோடையிலும் இருமல் பாதிப்பு அதிகமாக காணப்படும் ஒன்று. கோடையில் சுவாசக் குழாய் அலர்ஜிகளும், கிருமி தாக்குதலும் அதிகரிக்கவே செய்கின்றன.

கோடை காலத்தில் ஏற்படும் இருமல் பாதிப்பு
கோடைக்கு என்றே சில குறிப்பிட்ட தாக்குதல்கள் உண்டு. அதில் ஒன்றுதான் இருமல் பாதிப்பு. இருமல் குளிர் காலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. கோடையிலும் இருமல் பாதிப்பு அதிகமாக காணப்படும் ஒன்று. கோடையில் சுவாசக் குழாய் அலர்ஜிகளும், கிருமி தாக்குதலும் அதிகரிக்கவே செய்கின்றன. இதனால் தொண்டை பாதிப்பு, வறட்டு இருமல் பாதிப்பு ஏற்படும். மூச்சு விடுவதில் சிலருக்கு சிரமம் ஏற்படும்.

பனி, குளிர் நேரத்தில் நாம் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்போம். ஆனால் வெயிலில் நாம் சர்வ சாதாரணமாய் வெளியில் செல்வோம். மிக சிறு பூச்சிகள் கோடையில் உருவாகும். இவை படுக்கை, தரை விரிப்புகளில் தங்கி இருக்கும். ஆக படுக்கை விரிப்பு போன்றவைகளை சுடு நீரில் தோய்த்து விடுங்கள். வீட்டினை சற்று குளுமையாய் வைத்திருங்கள்.

ஆஸ்துமா, சைனஸ் தொல்லை உடையவர்களுக்கு கோடையில் இருமல் ஆச்சர்யமானதல்ல. சற்று புற சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். இந்த தொடர் இருமல், தலைவலி, சோர்வு, அதிக வியர்வை, சிலருக்கு மார்பு விலா முறிவு கூட கொடுக்கலாம். தேவையான அளவு நீர் குடித்தல் மிக முக்கியம். பாதிப்பு கடுமையாய் தெரிந்தால் மருத்துவ உதவி பெறுங்கள்.

அன்றாடம் இரு வேளை சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது அனைவருக்கும் நல்லது. இருமல் குறையாதிருப்பதற்கு கீழ்கண்ட காரணங்கள் இருக்கலாம்.

* சளி, ப்ளூ ஜுரம் இவற்றிற்குப் பிறகு சுவாசக் குழாய் எரிச்சல் அடைந்திருக்கலாம்.
* உடலில் வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கலாம்.
* அதிக மன உளைச்சல் இருக்கலாம்.

* தேவையான அளவு உடலில் நீர் சத்து இல்லாமல் இருக்கலாம்.
* அதிக மூக்கடைப்பு மருந்தினை பயன்படுத்தி இருக்கலாம்.
* மிக வறண்ட அல்லது மிக குளிர்ந்த காற்றாக இருக்கலாம்.
* கிருமி தாக்குதலாக இருக்கலாம்.

* சில வகை ரத்தக் கொதிப்பு மாத்திரைகளாக இருக்கலாம்.
காரணத்தினை அறிந்து சிகிச்சை பெறுவதே நல்லது.
கோடையில் பிடிக்கும் சளி குளிர்காலத்தில் பிடிக்கும் சளியினை விடப்பாதிப்பு அதிகமாய் இருக்கலாம். இதனை தவிர்க்க சுகாதாரமே முதல் அவசியம்.
* அடிக்கடி கைகளை சுத்தமாய் கழுவுங்கள்.
* உங்கள் மேஜை, கம்ப்யூட்டர் போன்றவைகளையும் சுத்தமாய் வைத்திருங்கள்.

கோடையில் சரும பாதிப்பு:

வியர்வை சுரப்பிகள் அடைபடும் பொழுது திட்டு, திட்டாக, சிறு சிறு கட்டிகளாக கிருமி பாதிப்பினால் தலை வெள்ளையாக இருக்கும். கழுத்து, மேல் நெஞ்சு, சரும மடிப்புகள், மார்பகம், கீழே எனக் காணப்படும். பொதுவில் நல்ல காற்றுபடும் பொழுது இரண்டு நாளில் இவை தானே மறைந்துவிடும்.

அதிக வெயிலில் இல்லாமல் இருப்பதும், உடல் இறுகும் துணிகளை அணியாது இருப்பதும், அடர்த்தி அதிகமான லோஷன்களை உபயோகிக்காமல் இருப்பதும் இந்த பாதிப்பினை தவிர்க்கும்.

ஈரமின்றி, வியர்வையின்றி சருமத்தினை காக்கவும். பூஞ்ஞை பாதிப்புகள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை. அலர்ஜி பாதிப்புகளும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை.

கோடையில் மற்றும் அதிகமாக பாதிப்பு ஏற்படுத்துவது ஜலதோஷம் (அ) சளி மற்றும் ப்ளூ ஜுரம். இது சளியா அல்லது ஜுரமா என்றே பலருக்குத் தெரிவதில்லை. இரண்டுமே வைரஸ் கிருமிகள் ஏற்படுத்தும் பாதிப்புத்தான். இரண்டுமே சுவாசப் பாதையில் ஏற்படுத்தும் பாதிப்புதான். இரண்டுமே மக்களை வாட்டி எடுத்து விடும்.

ப்ளூ ஜுரம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய ஒன்று. சாதாரண சளித்தொல்லைக்கு வைட்டமின் சி, இஞ்சி, தேவையான அளவு நீர், ஓய்வு இவை மூலம் தீர்வு காணலாம்.
அம்மை நோய் பிரிவுகளும் இந்த கோடை காலத்தில் சர்வ சாதாரணமாகக் காணப்படுவதுண்டு.

வைரஸ் பாதிப்பான இது எளிதில் மற்றவர்களுக்கு பரவும் என்பதால் பாதிப்புடையோர் தனித்து இருப்பதே நல்லது.

* தலைவலி, அதிக ஜுரம்
* சிவந்த கொப்பளங்களை போன்று உடல் முழுவதும் ஏற்படும். இது வறண்டு உதிரும்.
* அதிக அரிப்பு இவைகளுக்காக மருத்துவ உதவி பெறலாம். ஜுரத்தினையும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

* சுத்தம் ஒன்றே மிக முக்கியம். தும்மல், இருமல் மூலமாக காற்றில் மற்றவர்களுக்குபரவக்கூடியது.
* குளிர்ந்த உணவுகளை (உ&ம்) இளநீர், மோர் இவைகளை கொடுப்பது சிறந்தது.

இதுவரை இந்த பாதிப்பு இல்லாதவர்கள் இதற்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். அதிக கூட்டம் நிறைந்த இடங்களுக்கு சென்றால் உடனடியாக கைகளை சோப் கொண்டு கழுவுங்கள்.

* அதிக அசைவ, மசாலா உணவுகளைத் தவிருங்கள்.
* எளிய, தூய, இறுக்கமில்லாத பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
* பாதிப்பு உடையவரிடம் இருந்து தள்ளி இருங்கள்.
* நீரில் சிறிது வேப்பிலையினை முதல் நாளே போட்டு மறுநாள் அந்நீரில் குளியுங்கள்-.
* தேவையான அளவு ஓய்வு எடுங்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு :

* கர்ப்ப கால காலை சங்கடங்கள், சோர்வு, வலி கர்ப்பிணி பெண்களுக்கு கோடையில் சற்று அதிகமாய் காணப்படும்.
* பொதுவில் கர்ப்ப காலத்தில் உடலின் உஷ்ணம் சற்று கூடுதலாக இருக்கும். கோடையில் இது இன்னமும் கூட செய்யும்.
* தேவையான நீர், ஆரோக்கிய உணவு இவை அவசியம்.

* கர்ப்ப காலத்தில் சிலருக்கு கால் வீக்கம் இருக்கும். இது கோடையில் இன்னும் சற்று கூடலாம். முறையான பாதணிகளை அணியுங்கள். கால்களை தொங்க விடாது சற்று தூக்கி கூரிய ஸ்டூல் மேல் வைத்துக்கொள்ளுங்கள்.
* உஷ்ணம் அதிகமில்லாத நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள்.201705120834414959 Cough problem in summer SECVPF

Related posts

அதிகாலை வெந்நீர்,ஆஹா பலன்கள்!

nathan

உங்களுக்கு எடுப்பான மார்பகங்கள் வேண்டுமா? அப்போ இந்த மசாஜ் செய்து பாருங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா ஏன் கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும் ?

nathan

தெரிஞ்சிக்கங்க…தூக்கம் ஏன் மிகவும் இன்றியமையாதது என்பதற்கான சில காரணங்கள்!!!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன…?

nathan

கருவுற்றிருக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்…! கர்ப்பிணி பெண்கள் மாம்பழம் சாப்பிட கூடாதா.?!

nathan

இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போடாதீங்க

nathan

உங்களுக்கு தெரியுமா? இண்டு மூலிகை பற்றி

nathan

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!

nathan