களள
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா எலும்புக்கும், நரம்புக்கும் வலிமை தரும் கொள்ளுப்பொடி

தேவையான பொருள்கள் :

கொள்ளு – 100 கிராம்

மிளகாய் வத்தல் – 6
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 10 பற்கள்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கொள்ளு சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அதை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் மிளகாய் வத்தலை போடவும்.

மிளகாய் வத்தல் நன்கு வறுபட்டதும் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதை தனியாக எடுத்து வைக்கவும்.

அடுப்பை அணைத்து விட்டு சூடாக இருக்கும் அதே கடாயில் கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.

பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.

பூண்டை தோலுரித்து வைக்கவும்.

ஆறியவுடன் வறுத்த பொருட்கள் மற்றும் பூண்டு சேர்த்து மிக்ஸ்சியில் நன்றாக திரித்துக் கொள்ளவும்.

அதை ஒரு பேப்பரில் பரப்பி நன்கு ஆற விடவும். ஆறிய பின் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.

சுவையான கொள்ளுப்பொடி ரெடி.

இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.Courtesy: MaalaiMalar

Related posts

சுவையான சிம்பிளான… தேங்காய் சாதம்

nathan

சூப்பர் டிப்ஸ் சப்போட்டா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

nathan

தினமும் ஹோட்டலில் சாப்பிடாதீங்க – ஆபத்து

nathan

உங்களுக்கு தெரியுமா அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது…?

nathan

ராகி உப்புமா

nathan

நீங்கள் காலை உணவு சாப்பிடாதவர்களா அப்படின்னா இதை படிங்க!

nathan

சாக்லெட் பன்னகோட்டா வீட்டிலேயே செய்வது எப்படி?

nathan

ஆண்கள் அப்பாவாக உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்த உணவுகளை உண்பதற்கு முன்/பின் தெரியாம கூட பாலை குடிச்சுடாதீங்க..

nathan