உடலுக்கு ஏதேனும் சிறிய பிரச்சனை எனினும், பதறி அடித்து மருத்துவனைக்கு ஓடும் நம்மில் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது தான் நிதர்சனம். கண்டதை எல்லாம் உண்ணும் பழக்கம் இருக்கும் நமக்கு, அதில் என்ன சத்து இருக்கிறது என்று உணர்ந்து உண்ணும் பழக்கம் இல்லை.
குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரை பெரும்பாலானோர் உணவில் தவிர்க்கும் முதல் உணவாக இருப்பது சின்ன வெங்காயம். ஆனால், அதில் தான் நம் உடலுக்கு மிக முக்கியமென கருதப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கின்றது.
உலக அளவில் மக்கள் உயிரிழப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவதில், நோய் எதிர்ப்பு சக்தியின்மையும் ஒன்றாகும். இனி, நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் பற்றி காணலாம்….
இறப்பு விகிதம்
ஒவ்வொரு வருடமும் வைரஸ் காய்ச்சல், கக்குவான் இருமல், அம்மை போன்ற நோய்களின் காரணமாக 20-30 லட்சத்திற்கும் மேலானோர் இறக்காமல் இருப்பதற்கு காரணமாக இருப்பது நோய் தடுப்பு முறை தான்.
தடுப்பு மருந்து
வெவ்வேறு நோய் தொற்று காரணங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக, கடந்த 2010 ஆண்டு மட்டும் ஓர் வயதிற்கும் குறைந்த 10 கோடியே 9 லட்சம் குழந்தைகளுக்கு மூன்று தவணையில் நோய் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கா
ஆப்ரிக்காவில் தான், பெரும்பாலும் நோய் தொற்றுகளினால் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், விழிப்புணர்வு குறைவாகவும் இருக்கிறது என்கிறது ஐ.நாவின் ஆய்வறிக்கை.
1 கோடியே 93 லட்சம்
உலகெங்கிலும் ஏறத்தாழ 1 கோடியே 93 லட்சம் குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் வழங்க வேண்டிய அவசியம் இருப்பதாக கூறப்படுகிறது.
உயிரிழப்பு
ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள், ஒவ்வொரு வருடமும் நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்மையினால் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
ஐ.நா.வின் முடிவு
வரும் ஆண்டுகளில் வளர்ந்து வரும் 11 நாடுகளில் வைரஸ் காய்ச்சல்களுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது ஐ.நா
தட்டம்மை
நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பற்றிய பல பிரச்சாரங்களினால், 3,50,000 ஆக இருந்து ஆண்டு உயிரிழப்பு எண்ணிக்கை 1,64,000 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
போலியோ
1980-களில் இருந்து உலகமெங்கும் போலயோ காரணமாக கொத்து கொத்தாக லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படும், உயிரிழந்தும் வந்தனர். முக்கியமாக ஆப்கானிஸ்தான், இந்தியா, பாக்கிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் இது வெகுவாக பரவி வந்தது. பின் உலக நாடுகளின் முனைப்பினால் போலியோ குறித்த விழிப்புணர்வுகள் பரப்பப்பட்டு இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
போலியோ ஃப்ரீ இந்தியா
1990-களில் போலயோ அதிகமாக பரவும் நாடாக இருந்த இந்தியாவில், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு போலயோ குறைபாடு கூட ஏற்படவில்லை. இதனால் இந்தியாவை போலியோ இல்லாது தேசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
மருத்துவ உலகில் ஒவ்வொரு மனித உயிர்களுக்கும் மிக முக்கியம் என கருதப்படுவது, நோய் எதிர்ப்பு சக்தி. பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக தான் நிறைய உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. எனவே, அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியமாகவும்.